பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய பேருந்துகளின் மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக செல்வேன் .. பெரும்பாலான பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்த...
எ தைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை பற்றிய சில வரிகள் ..... இவர் கோயம்புத்தூர் மாவட்டம் , கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார். இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார். சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்ட...
இ ப்போது உள்ள சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம் .அந்த மாதிரியான சமயங்களில் மிதிவண்டி போன்ற எரிபொருள் பயன்படுத்தாத வாகனங்கள் முக்கியத்துவம் பெறலாம் . இப்போது உள்ள புதுச்சேரியை , சுதந்திரத்திற்கு முன் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது , அப்போது அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய வண்டி விநோதமானது, அது என்னவென்று காண்போம் ... 'புஷ்புஷ்'(push push) என்பது ஒரு விதமான வண்டி.இந்த வண்டிகளில் சில ரிக்க்ஷா போலவும் ,சில பெட்டி வண்டிகள் மாதிரியும் இருக்கும்.மூன்று அல்லது நான்கு சக்கரமுள்ள இவ்வண்டிகளை மிருகங்கள் இழுப்பதில்லை; மனிதர்களே பின்னாலிருந்து தள்ளுவார்கள் . வண்டிகளின் அளவை பொறுத்து இரண்டு முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்யலாம்.வண்டியில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர் சுக்கானைப் பிடித்தக் கொள்ள வேண்டும். சுக்கன் என்பது ஒரு நீளமான இரும்புக் கம்பி.எந்தப் பாக்கம் போக வேண்டுமோ அந்தப் பக்கமாக இந்தச் சுக்கானைத் திருப்ப வேண்டும் . வண்டியின் பின்னாலிருந்து வண்டியைத் தள்ளுகிற மனிதனுக்கு வீதியில் வருபவர்களை தெ...
கருத்துகள்