இடுகைகள்

வரலாற்று உண்மைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

.புஷ்புஷ்' வண்டி

இ ப்போது உள்ள சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம் .அந்த மாதிரியான சமயங்களில் மிதிவண்டி போன்ற எரிபொருள் பயன்படுத்தாத வாகனங்கள் முக்கியத்துவம் பெறலாம் . இப்போது உள்ள புதுச்சேரியை , சுதந்திரத்திற்கு முன் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது , அப்போது அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய வண்டி விநோதமானது, அது என்னவென்று காண்போம் ...  'புஷ்புஷ்'(push push) என்பது ஒரு விதமான வண்டி.இந்த வண்டிகளில் சில ரிக்க்ஷா போலவும் ,சில பெட்டி வண்டிகள் மாதிரியும் இருக்கும்.மூன்று அல்லது நான்கு சக்கரமுள்ள இவ்வண்டிகளை மிருகங்கள் இழுப்பதில்லை; மனிதர்களே பின்னாலிருந்து தள்ளுவார்கள் . வண்டிகளின் அளவை பொறுத்து இரண்டு முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்யலாம்.வண்டியில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர் சுக்கானைப் பிடித்தக் கொள்ள வேண்டும். சுக்கன் என்பது ஒரு நீளமான இரும்புக் கம்பி.எந்தப் பாக்கம் போக வேண்டுமோ அந்தப் பக்கமாக இந்தச் சுக்கானைத் திருப்ப வேண்டும் . வண்டியின் பின்னாலிருந்து வண்டியைத் தள்ளுகிற மனிதனுக்கு வீதியில் வருபவர்களை தெ...

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

படம்
  உ லகில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதைகள்படித்து உள்ளோம் .. அதை உணர்ந்தும் உள்ளோம் ... அப்படியொரு கதை தான் இது .. அதில் ஒரு விசித்தரமான தகவலும் உள்ளது     பரோ மன்னர்கள் எகிப்து நாட்டை ஆண்டு வந்த காலம் . அம்மன்னர்கள் தங்களுடைய சொந்த சகோதரிகளையோ இல்லை பெற்ற பெண்களையோ தாரமாக ஏற்று உறவு முறையை மிகவும் கொச்சைபடுத்தினார்கள் .யார் -யார் உறவு என்கிற பாகுபாடே இல்லாமல் போய்விட்டது ..      இந்த மாதிரியான ஒரு கேவலமான முறை அழிந்து போக  காதலும் ஒரு காரணமாக அமைந்தது ..   ரோமானியார்கள் ஆட்சிக்குள் நுழைந்த போதுதான் இந்த விதமான மூட பழக்கங்களை அறவே ஒழிக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள் .. ஜூலியஸ் சீசர் என்னும் மாவீரன் விழுந்தது கிளியோபாட்ராவின் புத்திசாலிதனத்திலும் , அபரிவிதமான அழகிலும் தான் ...   இரண்டு உள்நாட்டு போரின் விளைவாக இருவரும் ஒன்று சேர்ந்தனர் . அதில் ஒன்று ரோம் நகரில் இரு பிரிவினர்களுள் ஏற்பட்ட யுத்தம் ஒன்று , மற்றொன்று மிகவும் விசுவாசிகளாக இருந்த எகிப்தியர்களிடையே நட...

ஆசிரியர் பணிக்கு இலக்கணம் "பாரதிதாசன்"

படம்
எ ல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதாக வையத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்லும் பெரும் பொறுப்பினை ஏற்று, தமிழ்க் கவிதைப் பணி ஆற்றிவந்த புரட்சிக்கவிஞர் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலே இந்தக் கருத்துகளின் கூறுகள் எங்கும் காணப்படும். பாரதிதாசனார் என்ன எழுதினாரோ அதன்படி நடக்கிறாரா என்று கூர்ந்து நோக்கும் கண்கள் ஓராயிரம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்ததுதான்!  அவர் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும், எதிர்த்தவர்களும் அவரை வேட்டை நாய்கள் போல் கவனித்து வந்தார்கள். இதனைப்பற்றித் துளிக் கவலையும் பாரதிதாசனாருக்கு இருந்ததில்லை. இழிவு ஒன்று காணில் அதன் சல்லிவேரையும் கூடக் கல்லி எறிவதில் ஏற்படும் இன்னல் எதுவாயினும் ஏற்பதும், இன்னுயிர் போவதானாலும், தாம் கொண்ட கொள்கையில் இம்மிபிறழாமல் வாழ்வதும் அவருள் ஊறிப்போன பழக்கம்! மாணவப்பருவம் தொடங்கி, தம் மூச்சு முடியும்வரையில் இதையே புரட்சிக்கவிஞர் நிலைநாட்டிக் கொண்டிருந்தார். புரட்சிக்கவிஞர் தமிழாசிரியராய் வேலை-பார்த்தகாலை, புதுவை, பிரஞ்சிந்தியா என்ற தனியாட்சியில் இருந்ததல்லவா! அக்காலத்தில் தமிழ்ப் பாடநூல் புதுவைக்கென எதுவும் இல்லை. அன்...

அறிவியல் மேதைகள் ஏன் சிரிப்பதில்லை ?

படம்
சர் சி.வி. ராமனாகட்டும் , ஐன்ஸ்டீனகாட்டும் , ஜகதீஸ் சந்திர போஸ் ஆகட்டும் , எந்த அறிவியல் மேதைகளும் சிரிக்கிற மாதிரி படம் வந்து யாரும் பார்த்ததில்லை .பொதுவாகவே அறிவியல் மேதைகளுக்கு ஹாஸ்ய உணர்ச்சி கம்மி என்றும் இவர்களில் லூயி பாஸ்டர் மகா மோசம் என்றும் பாட்ரிஸ் டேபர் என்ற பிரெஞ்சு பேராசிரியர் கூறுகிறார் .              எந்தப் பெரும் புள்ளிக்கும் ஒரு ரகசிய வாழ்க்கை இருக்குமாம்  . அப்பிடி எதுவும் லூயி பாஸ்டருக்குக் கிடையாதாம் . நாற்பது வயதில் பக்கவாத நோய்க்கு ஆளான இவர் , உணர்வு பொருட்கள் புளித்துப் போவது( fermentation ) ஏன் என்ற தத்துவத்தை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. பட்டுப் பூச்சிகளுக்கு ஏற்பட்ட  ஒரு நோயின் காரணத்தை கண்டறிந்து பிரான்ஸ் நாட்டில் பட்டுத்  தொழில் நசியாமல் காப்பாற்றினார் . லூயி பாஸ்டர்                                                         ...