இடுகைகள்

அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த அறிவியல் சாதனைகள்

ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா எழுதிக்கொண்டிருந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரை நம்மில் பலர் படித்திருப்போம். ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், "இந்த ஆண்டின் சிறந்த . . ." என்றொரு பட்டியலை வெளியிடுவார். "சிறந்த ஸ்வீட்", "சிறந்த காரம்" என்று ஆரம்பித்து, "சிறந்த பாடல்", "சிறந்த புத்தகம்" என்று எங்கெல்லாமோ அந்தப் பட்டியல் நீளும். அதனை நினைவூட்டும் வகையில், அமெரிக்காவின் பிரபல டைம் பத்திரிகையில் சென்ற ஆண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி நிபுணர்கள் எழுதியிருந்தார்கள். அமெரிக்காவில் நடக்கும் ஆராய்ச்சியைப் பற்றி மட்டும் பேசாமல், உலகம் முழுவதைப் பற்றியும் பேசியிருந்தார்கள். அறிவியல் ரீதியில் உலகம் தற்பொழுது எங்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும் பட்டியல். அதனை  உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .. 1. Large Haldron Collider ஸ்விட்சர்லாண்ட் - ஃப்ரான்ஸ் நாடுகளின் எல்லைப் பகுதியின், CERN (European Organization for Nuclear Research) நிறுவனம் கட்டிய பிரம்மாண்டமான Particle Acceleratorதான் அது. உல...

அறிவியல் உண்மைகள்

நீண்ட நாளைக்கு பின் அறிவியல் உண்மைகள் தலைப்பு  பற்றி எழுதுகிறேன் .  சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?    சயனைடுகளில் - பொட்டாசியம் சயனைடு (KCN) ,சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை நச்சுத் தன்மை கொண்டவை . இந்த கனிம உப்பிலுள்ள சயனைடு அயனி (CN -) தான் நச்சுப் பண்புக்குக் காரணம் .        இந்த சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் ரத்த ஓட்டத்தை அடைகிறது ; இரத்துச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமொகுலோபினோடு  ( சுவாச நிறமி ) இணைகிறது .குறிப்பாக ஹீமொகுலோபினில் உள்ள இரும்பு அணுக்களோடு இணைவதினால் ஆக்சிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப் படுகிறது .இதனால் சுவாசம் தடைப்பட்டு நின்று  விடுகிறது .உடல் உறுப்புகள் அனைத்தும் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டு இறப்பு உறுதியாகிறது    இயற்கை நிறங்காட்டிகள்       அமிலமா(acid ) ? காரமா (base) ?  எனக்  கண்டறிய  சில காட்டிகளை (indicators) பயன்படுத்துவார்கள்  .நீல லிட்மஸ் தாளை தேய்த்து எடுத்தால் சிகப்பாக மாறினால் அது அமிலம் என்றும் , சிகப்பு  லிட்மஸ்...

நேக்ட் மோல் எலி மூலம் புற்றுநோய்க்கான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சி!

படம்
இங்கிலாந்து: நேக்ட் மோல் எனப்படும் எலி வகையின் மரபணுக்களைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சியை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே முதன்முறையாக இவ்வகை எலியின் முழு மரபணு வரைவினை வெளியிட்டுள்ளனர். லண்டன் குயீன்மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்தே இவ்வாய்வை மேற்கொண்டுள்ளனர். நேக்ட் மோல்  எலிகள் இவ்வகை எலிகளானது கிழக்கு ஆபிரிக்காவில் பரவலாக உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்களாகும். அதாவது சாதாரண எலிகளை விட 7 முதல் 10 மடங்கு அதிக காலம் இவை வாழக்கூடியவை. தோற்றத்தில் இந்த எலி இனமானது முற்றிலும் வித்தியாசமானதும் வெளிர் நிறமானதும் மயிர்கள் அற்றதுமான தோலைக் கொண்டுள்ளன.

மார்பக புற்றுநோயை தடுக்கிறது சூரியஒளி!

படம்
தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை.  இந்த ஹார்மோன்தான், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர, வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால், மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை, வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

அறிவியல் உண்மைகள்

படம்
  ஊறுகாயை எடுப்பதற்கு உலோக கரண்டிகள் ( metal spoons) ஏற்றதல்ல , ஏன்?  1.ஊறுகாயில் உள்ள எலுமிச்சை பழம் அமிலத் தன்மை உடையது .( it had citric acid) மற்றப் பொருள்கள் உப்புத் தன்மை உடையன  2.அமிலமும்   ,உப்பும் துருபிடித்தல் நிகழ்வை தூண்டும் பொருள்கள் . 3. அமிலத்துடனும், உப்புடனும் உலோக கரண்டி ( metal spoon) அரிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆற்று நீர் இனிப்பு ,கடல் நீர் கரிப்பு

படம்
சிரிப்புக்காக  கேட்கப்பட்ட கேள்வி. ஆற்று நீர் இனிக்கும் . ஆனால் அது சென்றடையும் கடல் நீர் கரிக்கும் .இதற்கு இரண்டு கரணங்கள் உள்ளன.           1 . கடல் நீர் சூரிய வெப்பத்தால்    ஆவியாதல்            2 .பாறைகளில் ஆற்று நீரால் ஏற்படும் அரிப்பு  பொதுவாக நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் .கடல் முழுவதும் உப்பு நிறைந்து இருக்கும்.சூரிய ஒளியில் நீர் தனது கொதிநிலையை  அடையும் பொழுது ஆவியாகி ஈர காற்றுடன் கலந்து மேகமாக நீர் சுழற்சிக்கான படி நிலையை மேற்கொள்கிறது .ஆனால் கொதிநிலை அதிகமான உப்பு தொடர்ந்து நீரில் சேகரமாக்கபட்டு வருகிறது.உப்பு கடல் நீரிலிருந்து பிரிதெடுக்கப்படுவதும் இந்த முறையின் மூலம் தான்.        உப்பின் பிறப்பிடம்  பாறைகள்.ஆற்று நீரின் வேகத்தில் பாறைகளில் அரிப்பு ஏற்பட்டு        உப்பு ,நீரில் கலந்து , ஏற்கனவே உப்பு நிறைந்து உள்ள கடலில் கலக்கிறது . பின்பு மீண்டும் இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது .

நியூட்டன் கண்ட புதுமை

படம்
இது  பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி அனைவருக்குமானது .. நியூட்டன் 1927ல் இறந்த பொழுது அவரது நண்பரும் ஆங்கில  கவியுமான போப் என்பவர் ஒரு கவிதை தீட்டினர் . நியூட்டன்  சமாதியில்  கல்லறையில் இக்கவிதை பொறிக்கப்பட்டது                        " இயற்கையும் இயற்கை விதிகளும்                            மறைந்திருந்தன இருளில்,                            கடவுள் கூறினார் , வரட்டும் நியூட்டன் என்று ;                            எல்லாம் ஒளிமயமகியது .                 ( Nature and Nature's Laws lay hid in night                   God said,let Newton be ! And all was light)     ஆம் உலகிற்கே ஒ ளி யுட்டியவராகப் போட்ட்...