ஆற்று நீர் இனிப்பு ,கடல் நீர் கரிப்பு
சிரிப்புக்காக கேட்கப்பட்ட கேள்வி. ஆற்று நீர் இனிக்கும் . ஆனால் அது சென்றடையும் கடல் நீர் கரிக்கும் .இதற்கு இரண்டு கரணங்கள் உள்ளன.
1 .கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாதல்
2 .பாறைகளில் ஆற்று நீரால் ஏற்படும் அரிப்பு
பொதுவாக நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் .கடல் முழுவதும் உப்பு நிறைந்து இருக்கும்.சூரிய ஒளியில் நீர் தனது கொதிநிலையை அடையும் பொழுது ஆவியாகி ஈர காற்றுடன் கலந்து மேகமாக நீர் சுழற்சிக்கான படி நிலையை மேற்கொள்கிறது .ஆனால் கொதிநிலை அதிகமான உப்பு தொடர்ந்து நீரில் சேகரமாக்கபட்டு வருகிறது.உப்பு கடல் நீரிலிருந்து பிரிதெடுக்கப்படுவதும் இந்த முறையின் மூலம் தான்.
உப்பின் பிறப்பிடம் பாறைகள்.ஆற்று நீரின் வேகத்தில் பாறைகளில் அரிப்பு ஏற்பட்டு
உப்பு ,நீரில் கலந்து , ஏற்கனவே உப்பு நிறைந்து உள்ள கடலில் கலக்கிறது . பின்பு மீண்டும் இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது .
கருத்துகள்