இடுகைகள்

கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் கார்ட்டூன்: அவமானமா? அங்கீகாரமா?

படம்
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், அரசியல் சட்டம் என்ற நத்தை மீது நின்று கொண்டு அதை சாட்டையால் அடிப்பதைப் போலவும், அதற்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் இந்தியாவின் முல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தன்னிடம் உள்ள சாட்டையால் அம்பேத்கரை அடிப்பதைப் போல  இருப்பதாகவும், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) சார்பில் வெளியிடப்பட்ட 11-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது . கடந்த 6 ஆண்டுகளாக அந்தக் கார்ட்டூன், பாடத்திட்டத்தில் இருந்தாலும் கூட, தற்போதுதான் அது  விவதாதிற்கு வந்துள்ளது . பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் கார்ட்டூன்: அவமானமா? அங்கீகாரமா? நீங்களே சிந்தியுங்கள் ....... 

திருப்பூர் தற்கொலை நகரமா?

படம்
               தமிழ்நாட்டில் உள்ள  தொழில் நகரங்களில் முக்கியமான தொழில் நகரம் திருப்பூர் . எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும் நகரம் . நான் கல்லூரி படிக்கும் காலங்களில் , திருப்பூரில் பைக் ஓட்டுவது மிகவும் சாவலான விஷயம்(    மூன்று ஆண்டுகள் என் கல்லூரி காலங்கள் திருப்பூரில் தான் கழிந்தது) .அந்த அளவிற்கு சாலைகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.இன்றும் திருப்பூர் சென்றால் , பனியன் மூட்டைகளை பைக்கில் வைத்து , எவ்வளவு சிறிய குறுகலான சாலையிலும் , அலட்டிக்காமல் ஓட்டி  செல்லும் மனிதர்களை பார்க்காமல் இருக்கமுடியாது. திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் இல்லாத தெருக்களே கிடையாது. ஒரே சிறிய அறையில் இயங்ககூடிய கம்பெனியிலிருந்து பெரிய அடுக்குமாடி கட்டடித்தில் இயங்ககூடிய கம்பெனிகள் வரை ஏரளாமான கம்பெனிகள்  உள்ளன . தென் தமிழக மக்களுக்கு வாழ்க்கை கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கும் மாநகரம் .ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர், கடந்த 20 ஆண்டுகளில் வியக்கத்தகுந்த தொழில் வளர்ச்சியை எட்ட...

இந்திய அரசு ஆதரவு - கோத்பய ராஜபக்ச சாட்சியம்

படம்
இந்த செய்தி நாம் ஏற்கனவே அறிந்த செய்திதான் . இருந்தாலும் இந்தக் கட்டுரையை படிப்பதன் மூலம் உண்மை உள்ளங்கை நெல்லிக் கனியாய் விளங்கும் . இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆகஸ்ட் 16 ஆம் தேதி  இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார். அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார். 1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்க...

நாளை சென்னை தினம்

படம்
    கெட்டும் பட்டணம் போய் சேர்  என்று ஒரு பழமொழி உண்டு .ஆனால் , எத்தனையோ உள்ளங்கள் வாழ்வதற்காக தமிழகம் மட்டுமின்றி , இந்தியாவின்  பல மாநிலங்களில் இருந்தும்  சென்னையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர் . இந்திய வரலாற்றில் மதராசப்பட்டினத்துக்கு பெரும்  பங்கு உண்டு. காலச் சக்கரத்தில்  பல முக்கிய நிகழ்வுகள் தடம் பதித்த  சென்னையை பெருமை  படுத்தும் விதமாக , நாளை சென்னை தினம் கொண்டாடப் படுகிறது .     தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னை, மாநிலத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு மாநகராக காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரும், சர்வதேச அளவில் பிரபலமான நகராகவும் விளங்கி வருகிறது.  371 ஆண்டுகளுக்கு முன்பு, 1639 ஆக. 22ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த, பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளரான ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் விஜய நகர அரசின் கீழ் இருந்த வந்தவாசியை ஆண்ட வெங்கடாத்ரி நாயக்கரிடம் (இவருடைய தந்தைதான் தமர்லா சென்னப்ப நாயக்கர்) பேசி, கடற்கரை அருகே இடத்தை வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். ந...

"உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!"

படம்
நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா! இனிமையாக பேசுகிறவர்களையா! சிரித்த முகம் உள்ளவர்களையா! வெகுளியாக இருப்பவர்களையா! இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள் விரும்புவீர்களா!  உங்களிடம் கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள், ஆனால் சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள் விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப வைத்திருக்கிறார் அது எப்படி? சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை, அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்துதான் பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம், எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம். உங்கள் உதடுகள் சில்லரைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பர...

காதலர் தினம் சங்க கால தமிழர்கள் கொண்டாடிய திருவிழா ......

 இன்று உள்ள இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் 'பிப்ரவரி 14 ' பற்றி தெரியாமல் போக வாய்ப்பே   இல்லை . ஆம் ,அன்றைய தினம் உலகம் முழுதும் கொண்டாடப் படும் ' வாலண்டைனின் தினம்'   எனப்படும் காதலர் தினம் தான் . இந்த தினம் கொண்டாடப் படுவதற்கு வேறு மாதிரியான வரலாற்று காரணங்கள் கூறப்பட்டாலும் அது தமிழர்கள் கொண்டாடிய சங்க கால திருவிழா என்பது தமிழர்களான நமக்கு தெரியுமா ? ஆம் காதலர் தினம் சோழர்கள் காலத்திலயே கொண்டாடப் பட்டு உள்ளது .அது பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை :                                         பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலக...

கலீல் கிப்ரான்

படம்
 இந்தியாவில் உன்னதமான கவி புல மிக்க கவிஞர்கள்  எத்தனையோ பேர் தங்களது  எழுத்துகளின் மூலம் இந்திய மண்ணுக்கு பெருமையையும் , மரியாதையையும் சேர்த்து வந்தனர் . அதே போல் அயல் நாட்டு கவிஞர்களும் தங்களது படைப்புகளின் மூலம் அநேக  மக்களின் மக்களை கொள்ளைக் கொண்டதோடு நில்லாமல் வாழ்வியல் நெறிகளையும் தந்து விட்டு சென்றனர் .அவர்களுள்  ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் போன்றோர்களின் படைப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை . இவர்களுள் என்னை  கவர்ந்தவர் கலில் கிப்ரான் .அவரை  பற்றி என்  அறிவுக்கு எட்டியவை சில உங்களுக்காக :   கலில் கிப்ரான் ( Khalil Gibran )   கலில் கிப்ரான் ( Khalil Gibran ) லெபனான் நாட்டைச் சார்ந்த கலைஞர், கவிஞர், எழுத்தாளர்.அவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகிக்கின்றன. கலில் கிப்ரான் எழுதிய புத்தகங்கள் ஓவ்வொரு மனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பபவை. தத்துவஞானியும்  கவிஞருமான கலீல் கிப்ரானின் பொன்மொழிகள் தமிழ் உட்படப் பல மொழிகளில் வெளி வந்து உள்ளன .லெபனானில் பிறந்து...

IT துறையில் பணிபுரிபவரா நீங்கள் ? உங்களுக்கோர் எச்சரிக்கை .....

படம்
இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம். கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு,நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக க...

கல்வி முறையில் மாற்றம் தேவை

ஓரு சமுதாயம் சிறப்புடன் வாழ மற்ற எல்லாக் காரணிகளையும்விட கல்வி மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. சில நேரங்களில் நாம் அளிக்கிற கல்வியே நம் சமுதாயம் பின்தங்கிப் போவதற்குக் காரணமாகிவிடும்.எனவே, நம் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை என்பதை நாம் சரியாக நிர்ணயிக்க வேண்டும். நம் சமுதாயம் மேம்பாடு அடையவும் நம் மாணவர்கள் எதிர்காலத்தில் தரமான குடிமக்களாக வாழவும் நாம் தருகிற கல்வி உதவ வேண்டும். இன்றைய நிலையைக் கூர்ந்து ஆராய்ந்தால், பொறுப்புள்ள குடிமக்களாக அவர்கள் உருவாக இந்தக் கல்வி முறை உதவி செய்கிறதா என்றால் இல்லை.இன்று நம் கல்வியில் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் சமூகத் தேவை சார்ந்து இல்லாமல் சந்தைக்கான அறிவுசார்ந்து இருக்கிறது. தவிர, நம் தேவைகளை எல்லா நிலைகளிலும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு மாணவர்களை உருவாக்கவில்லை.சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடிய கிரியா ஊக்கிகள்தான் மாணவர்கள். ஆனால், அப்படிப்பட்ட சிந்தனையில் இன்று மாணவர்களை நாம் உருவாக்கவில்லை.புதிய பொருளாதாரக் கொள்கையால் பொருளாதாரம் உத்வேகம் எடுத்து வருவதால், சந்தைப் பொருள...