இடுகைகள்

பொது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணா பல்கலை கழகத்தில் ஒரு நாள் .....

மாணவர்கள் பரப்பரப்பாக வகுப்பிற்கு சென்று  கொண்டிருந்தனர் , மாநிலத்தின் உயர்கல்வி துறை அமைச்சரும் ஆளுநரும் , பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார்கள் , அப்துல் கலாம் அவர்கள் லேசர் தொழில்நுட்பம் பற்றி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தக் கொண்டிருந்தார், சிற்றுண்டி விடுதியில் 15 வயதுள்ள சிறுவன் அங்கு மேசையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான் , வளாகத்தில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளியின் அழகான சிறுவர்கள் அழுக்கு  படிய மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர் , அண்ணா அங்கே சிலையாக இருந்தார் ...... .

இரயில் பயணங்களில் .......

படம்
தொ டர் வண்டி பயணம் , மற்ற பயணங்களை விட சுவாரசியமானது . அதிலும் முன்பதிவில்லா பொதுப் பிரிவில் பயணம் செய்வது பல அனுபவங்களை( சிரமங்களைகூட தரலாம்  ) தரும் .நான் பெரும்பாலும் பொது பிரிவில் பயணம் செய்பவன் என்பதால் , எனது அனுபவங்களை இந்த இடுகையில் பகிர்ந்து கொள்கிறேன் ..         அதற்கு முன் ஒரு வரலாற்று  செய்தி . இரண்டாவது உலகப் போர் நடைபெற்று  கொண்டிருந்த சமயம் ,இந்திய ரயில்வே கம்பெனிகாரர்கள் ஒரு  அறிவிப்பை வெளியிட்டனர் .'பயணத்திற்கு முன் பயணம் செய்வது அவசியமா என்பதை யோசியுங்கள் .அப்படி பயணம் செய்யும் போது குறைந்த பொருள்களுடன் பயணம் செய்யுங்கள் ' என்று வலியுறுத்தினார்கள் அது மட்டுமல்ல , சில ரயில் பாதைகளை எடுத்தார்கள் , ஓடும் ரயில்களின்...