இடுகைகள்

மறக்க கூடாத மாணிக்கங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜி.டி. நாயுடு (பள்ளிக்கு செல்லாத பல்கலைகழகம் )

படம்
எ தைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை பற்றிய சில வரிகள் .....    இவர்   கோயம்புத்தூர் மாவட்டம் ,   கலங்கல்   கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.       இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார். சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்ட...

பகத் சிங் ....

படம்
நான் முதன் முதலாக  " நேதாஜி" பற்றி எழுதியதும் வீரன் "பகத் சிங்" பற்றயும் எழுத வேண்டும் என தோன்றியது ....... க டுமையான போராளி .தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர் .கொலை ,கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை ;கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவை.அடிப்படையில் சுதந்திர தாகம் அவருக்கு இருந்தது .காந்திக்கு அது ஒரு பாதையை காட்டியது போல் பகத் சிங்க்கு வேறொரு பாதையை காட்டியது .   மிகவும் குறுகிய வாழ்க்கை காலம் அவருடையது .ஆனால் நூற்ற்றண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான படங்களைச்சுமந்து நிற்கும் வாழ்க்கை .சரித்திரத்தின் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்படாமல் சரித்திரத்தையே திருத்தி எழுதிய சூறாவளி  வாழ்க்கை .அவரது முறுக்கு மீசை போலவே கம்பீரத்துடனும் துடிதுடிப்புடனும் இருந்தது அவர் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் .   முதலளிதுவதுக்கு எதிராக ,ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ,அடக்கு முறைக்கு எதிராக பகத் சிங்  நிகழ்த்திய யுத்தம் ,அசாத்தியமானது ,அபாரமானது .   துப்...

நம்மால் அறியபடாத விடுதலை குயில்கள்

 கல்யாணி தாஸ் , வீணா தாஸ், இந்திய சுதந்திரம் அஹிம்சையின் பேரால் மட்டுமே வங்கி தர பட்டது அல்ல .எத்தனையோ புரட்சியாளர்களும் வீரர்களும் தங்களது உயிரை இந்திய விடுதலைக்காக துறந்திருகின்றனர் .அவர்களில் பதினாறு வயதான இளம் பெண்கள் இருவரின் கதை நமெக்கெல்லாம் சொல்ல படாதது. கல்யாணி தாஸ் , வீணா தாஸ் ஆகிய இருவரும்(1930 ஏப்ரல்) ,ஜாக்சன்  வங்காள கவர்னரின் வீடுக்குள் துணிச்சலாக உள்ளே புகுந்து தங்களது கை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியவர்கள்.    இவர்களது புகைப்படம் கிட்டவில்லை   

இளைய கிழவன்

படம்
நான் எழுதும் முதல் இடுகை .அதலால் எல்லோருக்கும் பிடித்த "நேதாஜி" பற்றி முதலில் எழுதுகிறேன் .நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை .இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஸ் சந்திரபோஷுகுஉண்டு.            "இந்திய உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீர  வேண்டும். அதற்கு ஒரே வழி போர் .அதை தவிர வேறு வழியே இல்லை'என்று நம்பியவர் நேதாஜி .அந்த தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டத்தில் குதிக்க வைத்தது .துப்பாக்கி ஏந்த வைத்தது.            இரண்டம் உலக போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் 'இந்திய தேசிய ராணுவப்படை ' பிரிட்டனுக்கு எதிராகப்  போரிட்டது குறிப்பிடத்தக்கது .போர் சுழலில் நேதாஜியும் போர் தந்திரமும்  தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை .தந்திரம் மிக்கவை. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக்  கண்டு பிரிட்டன் இராணுவமே அதிர்தந்தது. ஓடி ஒழிந்தது .நேதாஜியின்  அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது. அவரை பாராட்டியது . ...