இடுகைகள்

கண்டுபிடிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆக்சிஜணை மட்டும் சுவாசித்து, உணவே இல்லாமல் உயிர்வாழும் பாக்டீரியா.

படம்
டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்பார்ஸ் பல்கலைகழகத்தில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஹன்சிராய் என்பவர் விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் பாக்டீரியாக்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளார். வடக்கு பசிப்பிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றி இந்த ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒருவகை பாக்டீரியா உணவு எதுவும் உட்கொள்ளாமலேயே உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாக்ட்டீரியாக்கள் எட்டுக் கோடியே அறுபது இலட்சம் ஆண்டுகளாக உயிர்வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உணவுக்கு பதிலாக ஆக்சிஜணை மட்டும் சுவாசித்து இவை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் மூலம் அதற்கு தேவையான சக்தி கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த பாக்டீரியா பற்றி மேலும் விரிவான ஆய்வு நடந்து வருவதாக ஹன்சிராய் கூறியுள்ளார். இந்த வகை பாக்டீரியாக்கள் கடல் மட்டத்தில் இருந்து நூறு அடி ஆழத்துக்கு கீழே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்கண்டிஷன் சட்டைகள் – ஜப்பானில் தயாரிப்பு

படம்
வெயிலின் கடுமையை தாக்குப் பிடிக்க முடியாமல் அவதிப்படுவோருக்கு வசதியாக உடலை குளிரவைக்கும் “ஏர்கண்டிஷன்” சட்டை ஐப்பானில் தயாரிக்கப்படுகிறது. உடலை குளிர வைக்கும் ஏர்கண்டிஷன் சட்டையை ஐப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆபீசில், வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும்போது மிகவும் சிரமப்படுவர். வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும் அந்த நிறுவனம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஏர்கண்டிசன் சட்டையை தயாரித்துள்ளது. மழைக்கோட்டு போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டையில் உள் பகுதியில் 2 மின்சார விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அவை உயர் சக்தி கொண்ட பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தாக்குப்பிடிக்கும், பேட்டரிகள் மூலம் இயங்கும் மின்சார விசிறிகள் ஒரு நிமிடத்துக்கு 20 லிட்டர் காற்றை உற்பத்தி செய்து, சட்டையின் உள்பகுதி முழுவது...

மூளையால் பார்க்கலாம்!

படம்
பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைப் போல என்பார்கள்.  கண்களால் பார்க்க முடியாதவர்களை நாக்கின் மூலமாகப் பார்க்க வைக்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.  ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஆய்வுக் குழு ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவியின் மூலம் கண்பார்வையற்ற ஒருவர் பார்க்க முடியும்.  இந்தக் கருவி எப்படி இயங்குகிறதாம்?  பார்வையற்றவர்கள் கறுப்புக் கண்ணாடி ஒன்றை அணிய வேண்டும். அந்தக் கறுப்புக் கண்ணாடியில் ஒரு மிகச் சிறிய வீடியோ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர் பார்க்கும் திசையில் உள்ள காட்சிகள் வீடியோ கேமராவில் பதிகின்றன.  அந்தக் காட்சிகள் செல்போன் அளவே உள்ள கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு கட்டுப்பாட்டுக் கருவிக்கு அனுப்பப்  படுகின்றன.  வீடியோ கேமராவிலிருந்து அனுப்பப்பட்ட டிஜிட்டல் சிக்னல்கள் இந்தக் கருவியில் மின்னதிர்வுகளாக மாற்றப்படுகின்றன.  அப்படி மாற்றப்பட்ட மின்னதிர்வுகள் லாலிபாப் மிட்டாய் வடிவில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கருவிக்கு அனுப்பப்படுகின்றன.  அந்த லாலிபாப் வடிவ கருவியை வாயில் வைத்தால் அந்தக் கருவியிலிருந்த...