தலைமுடிப் பராமரிப்பு குறித்து சில டிப்ஸ்கள்
பெண்களைப் பொறுத்தவரை முன்பெல்லாம் நீண்ட தலைமுடியுடன் திகழ்வதையே அதிகம் விரும்புவார்கள். காலப் போக்கில் 'பாப்' உள்ளிட்ட பல்வேறு கட்டிங்குகள் வந்து விட்டன. பெண்கள்தான் தலையலங்காரத்திலும், தலை முடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது பொதுவான கருத்து. அதில் பாதி உணமையும் கூட. அதேசமயம், தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர். அழகிய, ஸ்டைலான, சற்றே நீளமான தலைமுடியை பல்வேறு ஆண்களும் கூட விரும்புகிறார்கள். அதாவது டோணி ஸ்டைலில் முடி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது. தலைமுடிப் பராமரிப்பு, தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்வது குறித்து சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம். 1. முதலில் நமது தலைமுடியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது முடி அலை அலையாக இருக்கிறதாஅல்லது சுருள் சுருளாக இருக்கிறதா அல்லது வளைந்து நெளிந்து இருக்கிறதாஅல்லது கோரையாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் நாம் பராமரிப்பை மேற்கொள்ள முடியும். 2. இயற்கையான எண்ணெய் வகைகள் நமது தலைமுடியை வலுப்படுத்தும்...