தலைமுடிப் பராமரிப்பு குறித்து சில டிப்ஸ்கள்

பெண்களைப் பொறுத்தவரை முன்பெல்லாம் நீண்ட தலைமுடியுடன் திகழ்வதையே அதிகம் விரும்புவார்கள். காலப் போக்கில் 'பாப்' உள்ளிட்ட பல்வேறு கட்டிங்குகள் வந்து விட்டன. பெண்கள்தான் தலையலங்காரத்திலும், தலை முடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது பொதுவான கருத்து. அதில் பாதி உணமையும் கூட. அதேசமயம், தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர். அழகிய, ஸ்டைலான, சற்றே நீளமான தலைமுடியை பல்வேறு ஆண்களும் கூட விரும்புகிறார்கள். அதாவது டோணி ஸ்டைலில் முடி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது. 

தலைமுடிப் பராமரிப்பு, தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்வது குறித்து சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்.
1. முதலில் நமது தலைமுடியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது முடி அலை அலையாக இருக்கிறதாஅல்லது சுருள் சுருளாக இருக்கிறதா அல்லது வளைந்து நெளிந்து இருக்கிறதாஅல்லது கோரையாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் நாம் பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.
2. இயற்கையான எண்ணெய் வகைகள் நமது தலைமுடியை வலுப்படுத்தும். எனவே அடிக்கடி நமது தலைமுடியை தண்ணீரால் கழுவக்கூடாது. அதற்கு பதிலாக நமது முடியின் மிருதுவான தன்மைக்கு ஏற்றவாறு நல்ல ஷாம்புகளை பயன்படுத்தலாம். பின் இயற்கை முறையிலோ அல்லது நல்ல டர்க்கி துண்டைக் கொண்டோ தலையை நன்றாக காய வைக்க வேண்டும்.
3. ஈரம் காய்வதற்கு முன்பாக தலை வாரினால் அதிகமாக முடி கொட்டிவிடும். எனவே தலை நன்றாக காய்ந்த பிறகுதான் தலை வாரவேண்டும். தலைமடியில் தூசு இருந்தால் விரல்களைக் கொண்டு மிருதுவாக எடுக்க வேண்டும்.
4. ஒரு சில நேரங்களில் நமது தலைமுடி வறட்சியாகக் காணப்படும். அப்போது நல்ல சலூனுக்குச் சென்று ட்ரிம் செய்யலாம். அப்போது நமது முடி அழகாக மாறும்.
5. நீளமான முடியை வளர்க்க விரும்பும் ஆண்கள் முறையான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். உணவில் நிறைய வைட்டமின் சத்துக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. ஃப்ளானல் தலையணைகள் நமது தலைமுடியை விரைவில் உலர்த்திவிடும். எனவே அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது.
7. குறிப்பிட்ட இடைவெளியில் ஹேர் ஸ்பா செய்ய வேண்டும். அது நமது தலைமுடியை மினுமினுப்பாக வைத்திருக்கும்.
பொதுவாக தலைமுடி 30 நாள்களுக்கு அரை இன்ச் அளவிற்குதான் வளரும். எனவே சலூன் போய் வந்தவுடன் முடி நீளமாக வளர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மிகவும் பொறுமையாக, உரிய முறையில் தலைமுடியை பராமரித்து வந்தால் தலைமுடி நன்றாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது