அறிவியல் மேதைகள் ஏன் சிரிப்பதில்லை ?

சர் சி.வி. ராமனாகட்டும் , ஐன்ஸ்டீனகாட்டும் , ஜகதீஸ் சந்திர போஸ் ஆகட்டும் , எந்த அறிவியல் மேதைகளும் சிரிக்கிற மாதிரி படம் வந்து யாரும் பார்த்ததில்லை .பொதுவாகவே அறிவியல் மேதைகளுக்கு ஹாஸ்ய உணர்ச்சி கம்மி என்றும் இவர்களில் லூயி பாஸ்டர் மகா மோசம் என்றும் பாட்ரிஸ் டேபர் என்ற பிரெஞ்சு பேராசிரியர் கூறுகிறார் . 
            எந்தப் பெரும் புள்ளிக்கும் ஒரு ரகசிய வாழ்க்கை இருக்குமாம்  . அப்பிடி எதுவும் லூயி பாஸ்டருக்குக் கிடையாதாம் . நாற்பது வயதில் பக்கவாத நோய்க்கு ஆளான இவர் , உணர்வு பொருட்கள் புளித்துப் போவது( fermentation ) ஏன் என்ற தத்துவத்தை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. பட்டுப் பூச்சிகளுக்கு ஏற்பட்ட  ஒரு நோயின் காரணத்தை கண்டறிந்து பிரான்ஸ் நாட்டில் பட்டுத்  தொழில் நசியாமல் காப்பாற்றினார் .

லூயி பாஸ்டர்
                                             
        
                  லூயி பாஸ்டருக்கு தேச பக்தி அதிகம் .பிரான்ஸ் நாட்டில் ஒரு பகுதியை ஜெர்மனி  கைபற்றியதால் ஜெர்மன் அதிபரான கெய்சர் கொடுக்க முன்வந்த விருதை ஏற்க மறுத்து விட்டார் .அறிவியல் விசயமாக யாராவது பேச வந்தால் தான் பேசுவார் . மற்றபடி   அரட்டை ,பொழுதுபோக்கு ??????  வாழ்நாளில்  பத்து  தடவை  தான் கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றிக்கிறாராம்  . இந்த அறிவியல் மேதை. 

                                ( அப்புறம் எப்பிடி சிரிக்கத் தெரியும் )
            







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது