இலவச திட்டங்களின் தந்தை

 இலவச வேட்டி , இலவச சேலை , இலவச சத்துணவு முதலான திட்டங்களின் தந்தை , டச்சு நாட்டின் தலை நகரமான ஆம்ஸ்டர்டாமில் பிறந்த ( பெயரை சிரமப்பட்டு படிக்கவும் ) ல்யூட்  ஷிம்மெல் பென்னிக் .

      நாற்பது வருடங்களுக்கு முன் இவர் ஆரம்பித்தது இலவச சைக்கிள் திட்டம் , சைக்கிள் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறிய இவர் , தன திட்டத்தை புதுமையான முறையில் நடைமுறைப்படுத்தினார் .அதாவது , இவரது வெள்ளை நிற சைக்கிள்கள் , விளக்குக் கம்பங்களின் கீழே நிறுத்தப்பட்டிருக்கும் .தேவையுள்ளவர்கள் அதை எடுத்துச் சென்று ,போகும் இடத்தில் அருகில் உள்ள விளக்குக் கம்பத்தின் கிழே விட்டு விட வேண்டும் .அங்கே தேவையுள்ளவர் அதை எடுத்துக் கொள்ளலாம் .

        சில நாட்களில் , எல்லா நல்ல திட்டங்களையும்  போல இந்தத் திட்டமும் கெட்டுவிட்டது.சைக்கிளைப் பழுதாக்கினார்கள்  சிலர். திருடிக் கொண்டு போனார்கள் சிலர் .72 வயதான சிம்மெல் பென்னிக் தன் திட்டத்தைக் கைவிடவில்லை .கம்ப்யுட்டர் பொருத்தி ,சைக்கிள்கள் திருட்டுப் போகாமல் பாதுகாப்பதுடன் ,ஒரு சிறிய  தொழிற்சாலை நிறுவி ,புதுமையான பல வாகனங்களை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார் . 

     புரிது  நம்ம ஆளுகளுக்கு மட்டும் இந்த மாதிரி ஒரு திட்டம் இருந்தால்  வடிவேல் காமெடி மாதிரிதான் ( இன்னும் ரெண்டு வருசத்துக்கு சைக்கிள்யே வேலை இருக்கு ,சைக்கிளை கொடு .......................................) தலைப்பை பார்த்து நம்ம தமிழ்நாட்டோட மேட்டர்னு நினைச்சிங்களா , நம்ம ஆட்கள்  பத்தித்தான்  நமக்கு தெரியுமே  . 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது