நேக்ட் மோல் எலி மூலம் புற்றுநோய்க்கான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சி!



இங்கிலாந்து: நேக்ட் மோல் எனப்படும் எலி வகையின் மரபணுக்களைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் புற்றுநோய்க்கு எதிரான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சியை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே முதன்முறையாக இவ்வகை எலியின் முழு மரபணு வரைவினை வெளியிட்டுள்ளனர். லண்டன் குயீன்மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்தே இவ்வாய்வை மேற்கொண்டுள்ளனர். நேக்ட் மோல்  எலிகள் இவ்வகை எலிகளானது கிழக்கு ஆபிரிக்காவில் பரவலாக உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்களாகும். அதாவது சாதாரண எலிகளை விட 7 முதல் 10 மடங்கு அதிக காலம் இவை வாழக்கூடியவை. தோற்றத்தில் இந்த எலி இனமானது முற்றிலும் வித்தியாசமானதும் வெளிர் நிறமானதும் மயிர்கள் அற்றதுமான தோலைக் கொண்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது