இடுகைகள்

இணையதளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் ஆதரவு "ஜி மெயிலுக்கே" ........

படம்
கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யாரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அளவிற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக்கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும். ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக்காட்டிலும் இருமடங்குக்கு மேலாக இந்திய வாடிக்கையாளர்கள் இருப்பதாக, அமெரிக்கா வில் இயங்கும் காம்ஸ் கோர் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. 62% மக்கள் இந்தியாவில் இதனைப் பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக, இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டில், 41% பேர் ஜிமெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 29%. இந்தியாவில் தான் கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாகவும், இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.          நன்றி - செய்தி.காம்

திடீர் என முடங்கிப்போகும் கணணியை புதிப்பிக்க புதிய வழிமுறை!

படம்
இணையத்தில் உலா வருகையில் பல வேளைகளில் பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன.  (01) செயலற்ற தன்மை: நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கணணி மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டுநீங்கள் செல்லலாம். மீண்டும் வந்து பார்க்கிற போது "Session Expired"என்ற செய்தி திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம். எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம். (02) குக்கீஸ்: சில தளங்கள் தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாதவர்கள் தளத்தைப் பார்க்க சில நிமிடங்களே ...

தனது பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

படம்
       கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் வரும் ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும் அதன் அண்மைக் காலப்பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால் அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது.  http://www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி ஆகஸ்ட் 1 முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பொக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது. இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால் கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் ...

புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கான இணையதளம்!

படம்
புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான நேரம் தான் இல்லை என்று கூறுபவர்களுக்கு என்றே பிரத்யேகமான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. புக்ஸ் என்பது அந்த இணையதளத்தின் பெயர். புத்தகங்களை குறிக்கும் ஆங்கில சொல்லான புக்ஸில் 'கே' விற்கு பதிலாக கியூ என்னும் எழுத்து இடம் பெறும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது. பெயரில் மட்டும் அல்ல செயல்பாட்டிலும் இதே புதுமை இருக்கிறது. படிப்பதை இன்னும் செயல் திறனோடு மேற்கொள்ளுங்கள் என்று சொல்லும் இந்த தளம் வாசிப்பதன் மூலம் தேவைப்படும் அறிவை சுலபமாகவும், இலவசமாகவும் பெறுங்கள் என்கிறது. புத்தகத்தில் உள்ளவற்றை சுலபமாக தெரிந்து கொள்வது என்பது சரி. ஆனால் இலவசமாக தெரிந்து கொள்வது என்றால் என்ன பொருள் என்று குழப்பம் ஏற்படலாம். இலவசமாக படிப்பது என்றால் படிக்காமலேயே படிப்பது என்று வைத்து கொள்ளுங்களேன். படிக்காமல் படிப்பது எப்படி என்று மீண்டும் குழப்பம் ஏற்பட்டால் முழு புத்தகத்தையும் படிக்காமல் அதன் சாரம்சத்தை மட்டும் சில வரிகளில் தெரிந்து கொள்வது என்று பொருள். புத்தகங்களின் சாரம்சம் அல்லது அதன் முக்கிய பகுதிய...