இடுகைகள்

கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காகிதப்புலிகளை உருவாக்கும் கல்வி

 எப்படியோ , சமச்சீர் கல்வி பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து பள்ளிகளிலும் கற்றல் - கற்பித்தல் நிகழ்வு  திறம்பட நடந்து கொண்டிருக்கிறது .இதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ , பெற்றவர்களுக்கு தான் பெரும் நிம்மிதி .அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு எழுதப் போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், இரண்டு மாதங்களாக என்ன செய்வதென்று தெரியாத நிலையில், சொல்லொணாக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். அரசியல் விருப்பு வெறுப்பு மாணவர்களின் படிப்பு உரிமையில் தலையிடக் கூடாதென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து, அனைவராலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.                     தீர்ப்பு வருவதற்கு இடைப்பட்ட காலத்தில் , பள்ளிகள் வினோதமான முறையில் இயங்கின . எங்கள் ஊரில் (தேங்காய் என்னை தயாரிக்கும்  )தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் அங்கும் , குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை ( பொடாரன் கம்பெனி ), வங்கிகள் ,  தபால்  நிலையம் , எல்.ஐ.சி ஆகிய  இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் செலுத்தும்   விதம் , தொழிற்சாலை இயங்கும் மு...

கல்வி - நல்ல வியாபாரம்

 ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்விக்கு முக்கியமான பங்கு உண்டு . அதே போல் தனி மனித வாழக்கைக்கும் கல்வி என்பது ஒரு அரிய புதையல் . "கல்வி இல்லாதவர் களர்நிலம் போன்றவர்' என்பார் பாரதிதாசன். அப்படிப்பட்ட கல்வி, இப்போது வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தவறில்லை.               ஆமாம்   நமது நாட்டின் கல்வியின் பாதை , வணிக ரீதியாக போய்க்  கொண்டிருக்கிறது .பிரேசில் நாட்டு கல்வியாளரான பாலோ ' பிரையிரே ' நமது கல்வி முறையை வங்கி கல்வி முறை என்று சொல்லியிருக்கிறார். அவர் அப்படி கூற காரணம் வேறு ( வங்கியில் பணத்தை டெப்பாசிட் செய்வதைப் போல ஆசிரியர் என்பவர் மாணவன் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்விமுறை எனப் பெயரிடுவதா என்று அவர் கொதித்தார்). ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கூடமே ஒரு வங்கியை போல தான் . அது தொடக்கப் பள்ளியாகவும் இருக்கலாம் , மருத்துவ கல்லூரியாகவும்  கூட இருக்கலாம். முன்பெல்லாம் கல்வியை நன்கொடையாக (இலவசக் கல்வி) நமக்குத் தருவார்கள். ஆனால், இன்றோ கல்விக்கு நாம் நன்கொடை (பணம்) வழங்கும்...

நாம் நினைவாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?

படம்
என்னால் படித்ததை நினைவில் வைக்க முடியவில்லை' என சில மாணவர்கள் ஆதங்கப்படுவார்கள் . அத்தனை செய்திகளையும் மூளையில் போட்டு வைத்தால் அது எப்படி தாங்கிக் கொள்ளும் என்றும் சிலர் கருத்துச் சொல்வார்கள். ஆனால் `மனித மூளைக்கு மிக அபார திறமை இருக்கிறது' என ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இவர்கள் மனித மூளையில் இரண்டு ``குயிண்டிலியன்'' (Quintillion) அளவுக்கு சின்னசின்ன செய்திகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் '' என்று ஆராய்ந்தும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது `ஒன்று' என்ற எண்ணிற்குபிறகு 18 பூஜ்யங்களை சேர்த்தால் எவ்வளவு மதிப்புவருமோ அதுதான் `குயிண்டிலியம்' என்பதன் மதிப்பாகும். அதாவது மனித மூளையின் சக்தி 40 விதமான மொழிகளை நினைவில் கொள்ளுகின்ற அளவுக்கு `அபாரசக்தி' கொண்டது.     இப்படி அதிக கொள்ளளவு கொண்ட மனித மூளையில் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி , சேமித்து பாதுகாப்பாக முறைப்படி வைக்காததுதான் இன்றைய மாணவ,மாணவிகளின் குறைபாடாகும்.   ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்க...

பரீட்சைகளின் போது உதவும் மனப்பயம்

படம்
கடந்த கால புதிய ஆய்வுகளிலிருந்து மனப்பயமானது மூலையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, பரீட்சைகளின் போது இறுதி நேரம் கற்கும் விடயங்கள் ஞாபகத்தில் இருப்பது கண்டறியப்பட்டள்ளது. மன வழுத்தம் ஏற்படும் போது ஹார்மோன்கள் அதிகளவில் எமது மூளையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் மூலையின் ஞாபக சக்தியின் அளவு அதிகரிக்கப்படுகின்றது. பேராசிரியர்களின் கருத்துப் படி மனவழுத்தம் ஏற்படும் போது மாணவர்கள் கல்வி கற்கும் போது அந்த விடயங்கள் மனதில் இலகுவாக பதிந்து விடுகின்றது. அந்த நேரத்தில் சுரக்கும் ஹோமோன்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது. உதாரணமாக, எமது வாழ் நாளில் தினமும் பல விதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. சந்தோஷமான நிகழ்வுகளும் நடைபெறும், கவலையான சம்பவங்களும் இடம்பெறும். அவ்வாறான சம்பவங்களில் எமது மனதை அதிகளவில் பாதித்த அல்லது காயத்தை ஏற்படுத்திய சம்பவங்களே எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மனவழுத்தமாகும். பரீட்சை கால இறுதி நேரங்களில் கற்கும் விடயங்கள் எமக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும். இதற்கு காரணம் பரீட்சை நெருங...

தொடக்கக் கல்வியின் தரமே இந்தியாவின் எதிர்காலம்: அப்துல் கலாம்

படம்
தொடக்கக் கல்வியின் தரத்தைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் மேலும் கூறியது:  ஆரம்பக் கல்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.  படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்பக் கல்வியை மாற்றி அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்துப் படிக்கும் வகையிலும், தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்திக் கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்றார்.  மேலும், லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருவது அவசியம். அதன்படி, சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அடைவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்...

மாணவர்களிடையே தொழில் திறனை ஊக்குவிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய திட்டம்

படம்
 பொறியியல் மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் தொழில்முனையும் திறனை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - ஐ-ஸ்பர்க் - என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இந்த புதிய திட்டம் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவன மேம்பாட்டுப் பிரிவின் முதுநிலை துணைத் தலைவர் எஸ். சோமசேகர், பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோர் அளித்த பேட்டி:  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் "ஐ-ஸ்பர்க்' என்ற திட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களிடையே புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, அவர்களிடையே புதைந்து கிடக்கும் தொழில்முனையும் திறனை வெளிக் கொணருவது ஆகியவையே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இதுவரை இந்தியாவில் 5 மாநிலங்களில் 25 கல்லூரிகளில் இந்தத் திட்டத்தை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், பல்கலைக்கழத்தில்  அறிமுகம் செய்வது இதுதான் முதல் முறை. பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 500...

டிப்-டாப்... லேப்-டாப்... ஊராட்சி பள்ளியா இது

படம்
"டிப்-டாப்' சீருடை, லேப்-டாப் கம்ப்யூட்டர், பவர்-பாயின்ட் படிப்பு, நுனி நாக்கில் ஆங்கிலம் என அசத்துகின்றனர், அந்த பள்ளியின் மாணவர்கள். இவர்கள் யாரும் ஊட்டி சர்வதேச பள்ளிகளில் படிக்கவில்லை... கோவை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் தான். தனியார் பள்ளிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு "ஹைடெக்' ஆக வளர்ந்து வருகிறது, இந்த பள்ளி. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தன்னை அடையாளம் காட்டி வருகிறது. மாணவர்கள் அழகான சீருடை அணிந்து, மிடுக்கான தோற்றத்துடன், பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், பவர் பாயின்ட் புரோஜக்டரில் ஆசிரியர்கள் ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியை கஜலட்சுமி கூறியதாவது: இப்பள்ளியில் காந்தவயல், காந்தையூர், உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் மற்றும் லிங்காபுரத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். மொத்த...

பெற்றோர்களே உஷார் .........

படம்
இப்பொழுது உலகமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எதிர் நோக்கி உள்ளது .அதே சமயத்தில் தமிழகத்தில் மார்ச் இரண்டாம் தேதி +2 ஆம்  வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுத உள்ளனர் .இப்போது உள்ள சிறார்களுக்கு கிரிக்கெட் என்பது எந்த அளவுக்கு பிரியமானது என்பது நாம் நன்கு அறிந்த செய்தியே.இந்த நேரத்தில் நமது மாணவர்களின் மனநிலை மதில் மேல் பூனை கதை தான்.நான் எனது பள்ளி மாணவர்களை ஆய்வு செய்த போது அவர்கள் கட்டுப்பாடு அற்ற சூழ்நிலை நிலவும் போது நிச்சயமாக கிரிக்கெட் பார்க்க நேரிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது .ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் ஒரு சில மாணவிகளிடமும் கிரிக்கெட் மோகம் நிலவுவதை கண்டறிந்தேன் ..ஆகவே பெற்றோர்களே உஷார்