கல்வி - நல்ல வியாபாரம்

 ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்விக்கு முக்கியமான பங்கு உண்டு . அதே போல் தனி மனித வாழக்கைக்கும் கல்வி என்பது ஒரு அரிய புதையல் . "கல்வி இல்லாதவர் களர்நிலம் போன்றவர்' என்பார் பாரதிதாசன். அப்படிப்பட்ட கல்வி, இப்போது வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தவறில்லை.

              ஆமாம்   நமது நாட்டின் கல்வியின் பாதை , வணிக ரீதியாக போய்க்  கொண்டிருக்கிறது .பிரேசில் நாட்டு கல்வியாளரான பாலோ ' பிரையிரே ' நமது கல்வி முறையை வங்கி கல்வி முறை என்று சொல்லியிருக்கிறார். அவர் அப்படி கூற காரணம் வேறு ( வங்கியில் பணத்தை டெப்பாசிட் செய்வதைப் போல ஆசிரியர் என்பவர் மாணவன் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்விமுறை எனப் பெயரிடுவதா என்று அவர் கொதித்தார்). ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கூடமே ஒரு வங்கியை போல தான் . அது தொடக்கப் பள்ளியாகவும் இருக்கலாம் , மருத்துவ கல்லூரியாகவும்  கூட இருக்கலாம்.முன்பெல்லாம் கல்வியை நன்கொடையாக (இலவசக் கல்வி) நமக்குத் தருவார்கள். ஆனால், இன்றோ கல்விக்கு நாம் நன்கொடை (பணம்) வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நன்கொடை வழங்கினால்தான் கல்வி கற்க முடியும் என்ற கட்டாய நிலையும் இப்போது உள்ளது. ஒருபக்கம் கல்விக்காக அரசு பல நல்ல திட்டங்களைத் தீட்டினாலும், மறுபக்கம் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியாமலும், கட்டுப்படுத்த முடியாமலும் திணறுகிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை. இந்திய அளவில் பள்ளிகளின் எண்ணிக்கையும், கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கேற்ப வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறதா என்றால் இல்லை. அரசுத் துறையில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக்கும், காலிப் பணியிடங்களுக்கும் உள்ள வித்தியாசமே இதற்குச் சான்று. அந்த அளவுக்குக் கற்றவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், புற்றீசல்போல் முளைக்கும் கல்வி நிறுவனங்களில் "ஒப்புக்கு'ப் படிப்பை முடித்து வெளியே வரும் இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது?
        
        தமிழகத்தில் மட்டும் 56 பல்கலைக் கழகங்களும், 28 மருத்துவக் கல்லூரிகளும், 77 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும், 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், 580 கலைக் கல்லூரிகளும், 419 பாலிடெக்னிக் கல்லூரிகளும், 1300-க்கும் மேற்பட்ட பிற கல்லூரிகளும் உள்ளன. தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்றழைக்கப்படும் கோவையில் மட்டுமே 200 கல்லூரிகளுக்கு மேல் உள்ளன. தலைநகர் சென்னையைக் காட்டிலும் இது அதிகம்.2011-12-ல் பொறியியல் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், இப் படிப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது. 2010-11-ல் அரசு ஒதுக்கீட்டில் இருந்த 1.20 லட்சம் இடங்களில் 1.12 லட்சம் இடங்களே நிரம்பின. அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் இந்த ஆண்டு மேலும் 34 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால், பல சுயநிதிக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைக்கூட நிரப்ப முடியாமல் அதையும் அரசிடம் ஒப்படைத்தது. இதனால், இந்த ஆண்டு பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்த பின்னரும் 45,021 இடங்கள் காலியாக உள்ளன. இந் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு, வகுப்புக்கு 111 மாணவர்களை அமர வைக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.இதே நிலைமைதான் திருச்சி  அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் .
      
            இது போன்ற அவலங்கள் நிகழும் பட்ச்சத்தில் எப்படி இந்திய திருநாட்டை வளம் மிக்க நாடக கட்டமைக்க முடியும் .  
 

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கூடமே ஒரு வங்கியை போல தான்

முற்றிலும் உண்மை.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சமீபத்தில் நடந்த பொதுப்பணித்துறைக்கான தேர்வில் 6000 இடங்களுக்கு 10 இலட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் நண்பரே..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...