என்னமோ? எதோ ? சில தகவல்கள்
சொந்த வேலைகள் காரணமாக கடந்த நான்கு தினங்களாக இடுகை எழுத முடியவில்லை . என்ன எழுதுவது என்று தெரிய வில்லை .அதனால் நான் படித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
- புனித அல்ஃபோன்சா இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.
- காந்தியடிகளுக்குத் தமிழில் கையொப்பமிடக் கற்றுத் தந்தவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார்.
- பொதுவாக எல்லா நொதிகளும் புரதங்களே என்று பலகாலமாய் நம்பப்பட்டு வந்தது. பின்னரே ரிபோசைம் எனும் நியூக்ளிக் அமிலங்களும் நொதிகளாய்ச் செயல்படுவது கண்டறியப்பட்டது.
- இராவண காவியத்தை எழுதிய புலவர் குழந்தை தந்தை பெரியாரின் கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார்.
- எறும்பு தின்னிகளின் இரைப்பையில் செரிமானத்திற்குதவும் ஐதரோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுவதில்லை. அவை தங்களின் இரையான எறும்புகளின் உடலில் உள்ள ஃபார்மிக் அமிலத்தையே செரிமானத்திற்கு நம்பி உள்ளன.
- மொகலாயர்களின் வரலாற்றை உலகறியச் செய்த அக்பர் நாமாவின் ஆசிரியர் அபுல் ஃபசல் மொகலாய இளவரசன் ஜகாங்கீர் தீட்டிய சதியால் தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- அதிக குளிரால் மரணமடைவோரில் ஐந்தில் ஒருவர் முரண்பாடான உடையவிழ்ப்பு என்ற நிலை ஏற்பட்டு குளிரடிக்கும் போதும் தன் உடைகளைக் களைந்து கொள்வார்.
- மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் சிலை தான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாகும்.
- வழுதுணங்காய் என்பது கத்தரிக் காயின் பழந்தமிழ்ப் பெயராகும்.
- பிரபஞ்சத்திலேயே அதிக அடர்த்தி உள்ள பொருள் கருந்துளை ஆகும்.
- தெளிகுற்றம் இழைத்தோரை காவல்துறையினர் எவ்வித பிடி உத்தரவும் இன்றிக் கைது செய்யலாம்.
- பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.
- பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக்கின் கண்டுபிடிப்புகள் 245 மில்லியன் மக்களைப் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
- பணவீக்க உயர்வால் கடனாளிகள் இலாபமடைகிறார்கள். ஏனெனில் அவர்களின் உண்மையான வட்டி குறைகிறது.
- பரமார்த்த குரு கதைகள் நூலை எழுதிய வீரமா முனிவர் தான் தமிழின் முதல் அகரமுதலியான சதுரகராதியைத் தொகுத்தார். அதற்கு முன் நிகண்டுகள் எனப்படும் கவிதை வடிவிலான அகரமுதலிகளே இருந்தன.
- இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் தன் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு முறையேனும் ரோட்டா வைரசு வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுகிறது.
- அஸ்கி தகுதரம் முதலியன 8 பிற்றில் இயங்குபவை. ஒருங்குறியோ 16 பிற்றில் இயங்குகிறது. எனவே தான் அது உலக மொழிகளுக்கெல்லாம் இடமளிக்கிறது.
- புவியின் மீது விழக் கூடிய பெரும்பாலான விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் புவியை விட அதிக ஈா்ப்பு விசை உடைய வியாழன் மீது விழுந்து விடுகின்றன. எனவே தான் வியாழன் 'புவியின் பாதுகாவலன்” என அழைக்கப்படுகிறது
- நெப்பந்தஸ் எனப்படும் குடுவைத் தாவரம் ஒரு ஊனுண்ணித் தாவரம் ஆகும். சத்தற்ற சதுப்பு நிலத்தில் வாழும் இது பூச்சிகள் மூலமே நைட்ரசனைப் பெற முடிகிறது.
- கௌதம புத்தர் ஞானம் பெற்ற போது அமா்ந்ததாகக் கூறப்படும் போதி மரம் உண்மையில் ஒரு அரச மரமாகும்.
- பாண்டா கரடியின் முதன்மை உணவு மூங்கில் ஆகும். எனவே மௌடம் ஏற்படும் போது அவை பெரிதும் அல்லற்படுகின்றன.
- இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது ஆரவல்லி மலைத்தொடர். இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.
- புவியின் மீது விழக் கூடிய பெரும்பாலான விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் புவியை விட அதிக ஈர்ப்பு விசை உடைய வியாழன் மீது விழுந்து விடுகின்றன. எனவே தான் வியாழன் 'புவியின் பாதுகாவலன்” என அழைக்கப்படுகிறது.
- அருகிவரும் உயிரினங்களுள் ஒன்றான பாண்டா கரடியின் முதன்மை உணவு ( 99% ) மூங்கில் ஆகும்.
- இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே எரிமலை அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.
- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுள் மிகவும் நீளமானது NH 7. வாரணாசியிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள இதன் மொத்த நீளம் 2369 கி.மீ.
நன்றி - அருவம்
கருத்துகள்