அடிமைகள் பற்றிய ஆராய்ச்சி

 'எட்வர்ட் பால் ' என்ற நியுயார்க் பத்திரிக்கையாளருக்கு, ஒரு பழைய நோட்டுப் புத்தகம் கிடைத்தது .அவருடைய தந்தை அவர்களுடைய  வம்சாவளியை  எழுதி வைத்திருந்தார் .முன்னூறு வருடங்களுக்கு முன் , பாலின் முன்னோர்கள் அடிமைகளை வைத்துப்  பண்ணை நடத்திச் செழித்தவர்கள் என்று அந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து தெரிய வந்தது .
      
       அதை வைத்து ஆராய்ச்சி செய்தார் .பாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 150 பேர் இருப்பதும் அடிமைகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 75000 பேர் இருப்பதும் தெரிந்தது . (யப்பா .... போதுமா 75000 பேர்)  அவர்களில் பலரைப் பேட்டி கண்டு ,முன்னோர்கள்   வாழ்ந்த இடங்களை பார்வையிட்டார் . 'SLAVES IN THE FAMILY ' என்ற புத்தகத்தை எழுதினார் .அது பரபரப்பாக விற்பனையானது  .ஆனால் தங்களை பற்றிச் சரியாக எழுதவில்லை என்று வெள்ளையர் ,கறுப்பர் இருவருமே அந்தப் புத்தகத்தை  தாக்குகிறார்கள் ' பண்ணை எஜமானர்கள் மட்டுமல்ல , எஜமானிகளும் அடிமைகளை கொடுமையாக நடத்தினார்கள் .தாங்களே சவுக்கினால் அடிமைகளை அடித்தார்கள் .இன்னும் பலமாக அடிக்கும்படி கணவர்களிடம் சொன்னார்கள் ' என்று பால் தனது புத்தகத்தில் குறிபிட்டிருக்கிறார் . 

     ( பண்ணையாரின் மனைவி கருணைக் கடலாக இருப்பதுதானே  வழக்கம் - தமிழ் சினிமாவில் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது