இறந்துபோன பிரபலங்களின் கதை !
இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் வருடந்தோறும் ஒரு வினோதமான காரியம் செய்து வருகிறது .ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இறந்து போனவர்களில் பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து வகை வாரியாக பிரித்து , தனிதனி புத்தகமாக வெளியிட்டு வருகிறார்கள் .கிறுக்குத் தனமான புள்ளிகள், ஹீரோக்கள் ,பொழுதுபோக்கு கலைஞர்கள் , போக்கிரிகள் இது போன்ற தலைப்புகளில் புத்தகம் வருகிறது . மனிதர்களின் குணாதிசியங்களை காட்டுவதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் . அந்த புத்தகங்களில் இருந்த சில வினோத தகவல்கள் :
ஆர் .டி .லாங் என்ற மனோத்தத்துவ நிபுணர் ,தினம் ராத்திரி மொட்டை மாடிக்கு போய் உட்கார்ந்துக் கொண்டு சந்திரனைப் பார்த்து ஊளையிடுவாராம் . ( அமாவாசையன்று என்ன செய்வாரோ என்று தெரியவில்லை) . ஆல்பி ஹிண்ட்ஸ் என்ற கொள்ளைக்காரன் எப்போதும் தன வழக்குக்குத் தானே வழக்கறிஞராக ஆஜராவனாம் .ஏதாவது சட்டப் பிரச்சினையில் நீதிபதி தலையை சொரிந்து கொண்டாரானால் ' கனம் நீதிபதி அவர்களே , அந்தப் பிரச்சினையில் தங்களுக்கு உதவ செய்ய முடியும் என்று நினைக்கிறேன் என்று சொல்வானாம்
ஜெப்ரே பெர்னார்டு என்ற எழுத்தாளர் , தன் கல்லறையில் பொரிக்க வேண்டிய வாசகத்தை முன்னதாகவே எழுதி வைத்திருந்தாராம் . அதில் ' ... ..இவர் இரண்டு எழுதாத புத்தகங்களையும் , விரோதிகளாகிவிட்ட சில சிநேகிதர்களையும் விட்டுச் சென்றுள்ளார் ' என்று எழுதி இருக்கிறார்
கருத்துகள்