அறிவியல் உண்மைகள்

நீண்ட நாளைக்கு பின் அறிவியல் உண்மைகள் தலைப்பு  பற்றி எழுதுகிறேன் . 

சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ? 

  சயனைடுகளில் - பொட்டாசியம் சயனைடு (KCN) ,சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை நச்சுத் தன்மை கொண்டவை . இந்த கனிம உப்பிலுள்ள சயனைடு அயனி (CN -) தான் நச்சுப் பண்புக்குக் காரணம் . 
      இந்த சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் ரத்த ஓட்டத்தை அடைகிறது ; இரத்துச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமொகுலோபினோடு  ( சுவாச நிறமி ) இணைகிறது .குறிப்பாக ஹீமொகுலோபினில் உள்ள இரும்பு அணுக்களோடு இணைவதினால் ஆக்சிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப் படுகிறது .இதனால் சுவாசம் தடைப்பட்டு நின்று  விடுகிறது .உடல் உறுப்புகள் அனைத்தும் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டு இறப்பு உறுதியாகிறது 

  இயற்கை நிறங்காட்டிகள் 

     அமிலமா(acid ) ? காரமா (base) ?  எனக்  கண்டறிய  சில காட்டிகளை (indicators) பயன்படுத்துவார்கள்  .நீல லிட்மஸ் தாளை தேய்த்து எடுத்தால் சிகப்பாக மாறினால் அது அமிலம் என்றும் , சிகப்பு  லிட்மஸ்  நீல நிறமாக மாறினால் அது  காரம் என்றும் கண்டறியலாம் . லிட்மஸ் கரைசலையும் பயன்படுத்தலாம் .
           இயற்கையில் சில காட்டிகள் உள்ளன . அவை செம்பருத்தி பூ , சங்கு பூ என்றும் கூறலாம். செம்பருத்திப்பூ சிவப்பு லிட்மஸ் தாளாகவும் , சங்கு பூ நீல லிட்மஸ் தாளாகவும் செயல்படுகின்றன . செம்பருத்திப் பூவின் இதழை எடுத்து வெள்ளைத் தாளில் அல்லது  காரப்பொருட்களில் (base)  தேய்த்தால் அது    நீல வண்ணமாக மாறும். அதில் எலுமிச்சைச் சாறை (  சிட்ரிக் அமிலம்) கலக்கும் போது சிவப்பு நிறமாக மாறும் .அமில கார வேறுபாட்டை அடையாளம் காட்டும். 
             சங்குப்பூவை ( நீல நிறம் ) எடுத்து அமிலத்தில் தேய்த்தால் அது சிவப்பாக மாறும்.அதே பூவை கார கரைசலில் தேய்த்தால் பழைய படி நீல நிறமாக மாறுவதை பார்க்கமுடியும் .இதே போல் பண்புகளை கொண்ட இயற்கை காட்டிகளாக செயல்படுகின்ற பூக்கள் பல உள்ளன . 

அறிவியலை பயன்படுத்தி கண்கட்டி வித்தைகள் ( போலி சாமியார்களின் மந்திர சக்திகள் )

                சில வருடங்களுக்கு முன்னர் சென்னை குப்பங்களிலும் , விழுப்புர மாவட்டத்தின்  ஒரு சில கிராமங்களிலும் இரவில் குடிசைகள் தானாக பற்றி எரிந்தன . கிராம மக்கள் கடவுள் குற்றம் என்று அஞ்சினார்கள் . சிலர் ஊரையே காலி செய்தனர் . இதற்கான காரணம் அறிவியலின் சிறப்பு பண்புகளில் இதுவும் ஒன்று . இதை ஒரு சிலர் தங்களது  சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் . வெண் பாஸ்பரஸ் என்ற தனிமத்தின் இயற்பியல் பண்புகளில் முக்கியமான  ஒன்று , உலர்ந்த நிலையில் அது தானாகவே எறியும் . இந்த  வெண் பாஸ்பரசை சாணத்தில் கலந்து  குடிசை மீது சில அறிவு ஜீவிகள் வைத்து உள்ளனர் .சில மணி   நேரங்களுக்கு பின்  வெண் பாஸ்பரஸ் உலர்ந்து தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது .

 முட்டையை  மந்திர சக்தி மூலம் பறக்க வைக்க முடியுமா ? 

 முடியும் . இதுவும் டூபாக்கூர் வேலைதான் .குருவி பறக்கலாம்.  முட்டை பறக்க முடியுமா?  முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும்.  பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது