இனிய பாடகர் சாகுல் ஹமீது
சாகுல் ஹமீது |
இன்று மாலை நேரம் நான் கணிபொறி உடன் இயங்கி கொண்டிருந்த நேரத்தில் , நான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் வரிசையில் , 'திருடா திருடா' படத்தில் வரும் 'ராசாத்தி' எனத் தொடங்கும் பாடல் கேட்க நேர்ந்தது . ஒரு கணம் , மனம் லேசாக மாறியது ,என்ன ஒரு இனிமையான குரல் .இரு முறை ஒலிக்கவிட்டு கேட்டேன் .அதே சமயத்தில் அந்த இனிமையான குரலுக்கு சொந்தம் கொண்ட ஜீவன் , இன்று நம்முடன் இல்லையே என்று ஒரு விதமான ஏக்கம் கொண்டேன் . ஆம் இந்த குரலுக்கு சொந்தக்காரர் , சாகுல் ஹமீது . A.R ரஹ்மானுடன் தொடக்க காலத்தில் இணைந்து பணி புரிந்து உள்ளார் .இவரது பாடல்கள் பெரும்பாலும் ஏ. ஆர். ரகுமான் இசைத்த தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளன. 1980களில் சாகுல் ஹமீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி வந்தார். 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்தென்றல் மற்றும் சில நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் 1989ல் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து தீன் இசை மழை என்ற இஸ்லாமிய இசைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்றார். இன்றும் நீங்கள் அவர் பாடிய பாடல்களை கேட்க நேரிட்டால் , நிச்சயம் அந்தக் குரலின் அழகை உணரலாம் .உசிலம்பட்டி பெண்க்குட்டி , மாரி மழை பெய்யாதோ , அவள் வருவாளா , ராசாத்தி என் உசுரு ,செந்தமிழ்நாட்டு தமிழச்சியே , மெட்ராசை சுத்தி , போன்ற பாடல்களையும் இன்னும் சில பாடல்களையும் பாடியுள்ளார். 1998ல் சென்னைக்கு அருகே நடந்த ஒரு வாகன விபத்தில் சாகுல் ஹமீது இயற்கை எய்தினார்.( தமிழ் திரையுலகத்தில் இருந்து ஒரு இணய பாடகர் விடை பெற்றார்) . இருந்தாலும் அவரது பாடல்களின் மூலம் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டுதான் இருக்க்கிறார்
கருத்துகள்