நீதிமன்ற வழக்கிலிருந்து தப்புவது எப்படி ?


 சான்பிரான்சிஸ்கோவில் ,ஒரு கடையில் திருடிக்கொண்டிருந்த லேக்  என்பவனை போலீசார் பிடித்தார்கள் .அவன் தன் சட்டையில் மறைத்து வைத்திருந்த சயனடைக் குடித்து இறந்துவிட்டான் . அவனுடைய அறையை சோதனையிட்ட போது ஏராளமான வீடியோ படங்களும் டைரிகளும் கிடைத்தன .
   
     அவனும் அவனுடைய நண்பனான 'சார்லஸ் எங்' என்பவனும் சேர்ந்து ,பத்தொன்பது பெண்களைக் கற்பழித்துக் கொன்றிருக்கிறார்கள் என்று தெரிந்தது .எங்கைப் பிடித்து கைது செய்தார்கள் .அவனது ரகசிய அறையில் சதைப் பிண்டங்கள் கிடைத்தன. 
  
      இது நடந்தது 1985 ஆம் ஆண்டு .ஆனால் எங்கின் மீது இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தண்டனை கிடைக்கவில்லை .காரணம் , ஹாங்காங்கின் செல்வந்தரான வியாபாரி ஒருவனின் மகன் இவன் . 

   தன வழக்கைத்  தானே வாதாடுவதாகச் சொல்லி ,சட்டப்படி கிடைக்ககூடிய அனுகூலங்களைஎல்லாம் பெற்று வழக்கை நீடித்துக் கொண்டே இருக்கிறான் .
    
      ( நம் ஊர் அரசியல்வாதிகள் இவனிடம் பாடம் கற்கலாம் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...