காகிதப்புலிகளை உருவாக்கும் கல்வி

 எப்படியோ , சமச்சீர் கல்வி பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து பள்ளிகளிலும் கற்றல் - கற்பித்தல் நிகழ்வு  திறம்பட நடந்து கொண்டிருக்கிறது .இதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ , பெற்றவர்களுக்கு தான் பெரும் நிம்மிதி .அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு எழுதப் போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், இரண்டு மாதங்களாக என்ன செய்வதென்று தெரியாத நிலையில், சொல்லொணாக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். அரசியல் விருப்பு வெறுப்பு மாணவர்களின் படிப்பு உரிமையில் தலையிடக் கூடாதென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து, அனைவராலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
                    தீர்ப்பு வருவதற்கு இடைப்பட்ட காலத்தில் , பள்ளிகள் வினோதமான முறையில் இயங்கின . எங்கள் ஊரில் (தேங்காய் என்னை தயாரிக்கும்  )தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் அங்கும் , குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை ( பொடாரன் கம்பெனி ), வங்கிகள் ,  தபால்  நிலையம் , எல்.ஐ.சி ஆகிய  இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் செலுத்தும்   விதம் , தொழிற்சாலை இயங்கும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கினார்கள் .ஒரு சில பள்ளிகளில் குடை பின்னுதல் , சக்கரைப் பொங்கல் தாயரித்தல்( பெண்கள்  பள்ளி ) ஆகியன் பற்றியும் கற்றுக் கொடுத்தார்களாம் .சமச்சீர் கல்வி நல்லதா, கெட்டதா என்ற சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை .அதைப் பற்றி பலமுறை விவாதங்கள் நடைபெற்று முடிந்து விட்டன .
                     'நம் பழைய கல்வி முறையைப் பொறுத்தவரை இன்னும் மெக்காலே உருவாக்கிக் கொடுத்த 'காகிதப்  புலிகளை' உருவாக்கும் கல்வித் திட்டத்தின் அடிப்படையிலேயே உழன்று கொண்டிருக்கிறது; எனவே கல்வி முறையை மாற்ற வேண்டும்,' என்பதுதான் அன்றிலிருந்து இன்று வரை பலரும் கூறி வருகின்ற குற்றச்சாட்டு. சரி இதை வேறொரு பார்வையில் அணுகுவோம் .ஒரு ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் ஒரு மாணவன் ஆண்டு ஒன்றுக்கு 180 முதல் 200 நாட்கள் பள்ளி சென்று படித்து ஐந்து  ஆண்டுகளில் குறைந்த பட்சம் 1000 நாட்களை வகுப்பறையில் கழித்து விட்டு வெளியே வருகிறார் .ஒன்பதாம் வகுப்பு வரை கற்றவர் அதற்கு மேல் 800 நாட்கள் வரை  பள்ளியில் கழித்து 1800 சராசரி பள்ளி நாட்களை கழித்து விட்டு வெளியே வருகிறார் .நம் நாட்டில் பத்தாம் வகுப்பு இறுதிப் பொது தேர்வு எழுதும் ஒரு மாணவன் குறைந்த பட்சம்    2000 முதல்     2200 நாட்களை பள்ளியில் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் செலவிட்டு ஆக, 16,000 முதல் 17,600 மணி வரை தனது  வாழ்  நாளை செலவிட வேண்டியுள்ளது . இதில் Pre.K.G ,L.K.G  , U.K.G ஆகியவட்ட்ரை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை . ஆக, தனது 14 வது வயதில் உயர்நிலைக் கல்வியை முடிக்கும் மாணவனுக்கு , மனனம் செய்தல், எழுத  ,படிக்க தெரிந்ததை தவிர வேறென்ன தெரிந்திருக்கிறது . மொழியியல் , தர்க்கம் செய்தல், ஆராய்தல் , சிந்தித்து முடிவெடுத்தல் , வானியல் , வரைபடம் வரைதல் , அது மட்டுமின்றி முக்கிய அக குணங்களான ஒழுக்கம் , மனிதாபிமானம் , அன்பு செலுத்துதல் போன்றவை இன்றைய நாட்களில் உள்ள மாணவர்களிடம் காணப்படுகிறதா ? பன்னிரண்டாம் வகுப்பு வரையில் ஒரு மாணவனின் திறமையை எடை போடுவது மதிப்பெண்களே. நினைவாற்றலும், மனப்பாடம் செய்யும் திறனும் இருந்தால், மிக அதிக மதிப்பெண்கள் பெற்று எந்த ஒரு மாணவனாலும் வெற்றி பெறவியலும். ஆனால் அறிவுக்கும், நினைவாற்றலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பதுதான்.

 "எல்லா வினைகளுக்கும் சமமான ஒரு எதிர் வினை உண்டு" என்கிற சொற்றொடரின் பின்னணியில் காணக் கிடைக்கிற அறிவியலின் ஆற்றலை, அதன் பயன்பாட்டை, நடப்பு வாழ்க்கையில் இந்தச் சொற்றொடர் உள்ளீடு செய்யப்படுகிற இடங்களைக் குறித்து ஒரு விரிந்த தளத்தை உருவாக்கிக் கொடுப்பதே கல்வியின் மிக முக்கிய செயல்திட்டமாக இருக்க வேண்டும். எந்த மாணவன் இந்தச் சொற்றொடரில் இருந்து. அளப்பரிய வாழ்க்கைத் தத்துவங்களை உணர்ந்து கொள்கிறான் என்பது முக்கியமே தவிர, எந்த மாணவனுக்கு இது போல நிறையச் சொற்றொடர்கள் நினைவில் இருக்கின்றன என்பதல்ல கல்வி. ஒரு சமூகத்தின் அறிவாற்றலை சரியான திசையில் செலுத்த இயலாத பின்னிழுத்தலாகவே, இந்த நினைவாற்றல் கல்வியை நாம் நோக்க வேண்டும்.சிந்திக்க வழியின்றி வாத்தியார் சொல்வதை அப்படியே ஏற்று மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் நம் கல்வி முறை, எதையும் பகுத்து ஆராய்ந்து அறியும் படியான தன்மையை நம் மாணவர்களுக்கு வழங்காததால், மேலை நாடுகளைப் போன்று நம்மால் அறிவியல் சாதனையாளர்களை உருவாக்க முடியவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை.மனப்பாடம் செய்பவர்கள் தேர்வுத் தாளில் கடகடவென்று வாந்தி எடுப்பதோடு படித்ததை மறந்து விடுகிறார்கள். இவர்களுக்குத் தேர்வு எழுதும் போது இடையில் ஏதேனும் ஒரு சொல் தடங்கினாலோ, மறந்தாலோ ஆபத்து தான். அந்தச் சொல் நினைவுக்கு வராவிட்டால், அதற்கடுத்து வர வேண்டியவை தொடர்ச்சியாக மறந்து போய்விடுமாம். இது பள்ளியில் பெரும்பாலான  மாணாக்கர்கள்  சொல்வது .
          இந்த நிலையில் கல்வி முறை இருக்க , அரசு எவ்வளவு செலவு செய்து திட்டங்களை கொண்டு வந்தாலும் அது வெற்றி பெறுவது என்பதும்  சந்தேகம் தான்..........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...

இனிய பாடகர் சாகுல் ஹமீது