விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...
தமிழில் பயண நூல்கள் இல்லையே என்ற ஏக்கத்தை போற்றியவர் A.K .செட்டியார் . அமெரிக்கா பற்றி அவர் குறிப்பிடுகையில் , அங்கு உள்ள விசித்திரமான அதே சமயத்தில் உபயோகமான ,கண்ணியமான விளம்பர பலகைகள் பற்றிக் குறிபிட்டுள்ளார் . அந்த விளம்பரபலகைகளின் உதாரணங்களாக சில :
பள்ளிக்கு முன் இருந்த விளம்பர பலகை ,
இது ஒரு பள்ளிக்கூடம் ,தயவு செய்து வண்டியை மெதுவாக ஓட்டுங்கள் ,ஏனென்றால் நம் குழந்தைகளிடம் நமக்கு அன்பு உண்டு .
பலகாரக் கடையில் இருந்த விளம்பர பலகை ,
தயவு செய்து கடன் கேட்காதீர்கள் .ஏனென்றால் நாங்கள் மிகவும் ஏழைகள் .
கண்ட இடங்களில் எச்சில் துப்பாமல் இருக்க , அறிவுறுத்தும் விளம்பர பலகை ,
நீங்கள் எச்சில் துப்பும் பழக்கம் உடையவர்காளாக இருந்தால் ,இந்த இடத்திலும் எச்சில் துப்பலாம் ,வீட்டிலிருப்பதாகவே நீங்கள் என்ன வேண்டும் என்பது எங்கள் ஆசை ,
இது மாதிரியான பல விளம்பர பலகைகள் அமெரிக்காவில் இருந்ததாக A.K .செட்டியார் கூறுகிறார் . பொதுவாக ,உத்தரவு செய்வதை விட ,கேட்டுக் கொள்வது தான் சிறந்த முறை .பொது மக்களை ,ஒரு காரியத்தைச் செய்யும்படிக் கேட்டுக் கொள்ளும் பொழுது கண்ணியமாகவும் ,மரியாதையாகவும் கேட்டுக் கொண்டால் நல்லது .அது மட்டுமன்று ; எதற்காகக் கேட்டுக் கொள்கிறோமோ , அதற்க்குரியக் காரணத்தையும் கூறினால் ,பலன் அதிகம் உண்டாகும் . (இது பொதுவான கருத்து ஆனால் நம்ம தமிழ் மக்களுக்கு இது பொருந்துவது மிகக் கடினம் .) விளம்பர பலகை என்ற தலைப்பை கண்டவுடன் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் விளம்பர பலகை என்று நீங்கள் எண்ணியிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .
கருத்துகள்