இடுகைகள்

செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானே தோன்றியதல்ல "தானே"

படம்
க டலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர்.  1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது. இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.   அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.   இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்...

பேரறிவாளன் உறவினர்களுக்கு எழுதிய கடிதம்:

படம்
ரா ஜீவ் காந்தி கொலை வழக்கு சூத்திரதாரிகளில் ஒருவர் எனக்கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தன் தரப்பு நியாயங்ளை தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதமாக எழுதியுள்ளார். கடிதத்தில் தனது மனப்புலம்பல்களையும் தனது பெற்றோர்களுடன் பகிர்ந்தகொண்டுள்ளார்.இந்த கடிதம்  செய்தி.காம் என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருந்தது . உங்களுக்காக இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன் . தூக்குத் தண்டனையை எந்த நேரத்திலும் எதிர் நோக்கியிருக்கும் பேரறிவாளன், சிறையிலிருந்து குடும்பத்தினருக்கு எழுதியுள்ள கடிதம்:- பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,  வணக்கம்.  நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப் புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன். தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனித...

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பம்

தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தில் மாணவர்களை தேர்வு செய்ய நவ., 20 ல் தேர்வு நடக்க உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆக., 30 வரை வழங்கப்படும். கடந்த கல்வி ஆண்டில் 7ம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் பெற்று, தற்போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சத்திற்கு மிகக்கூடாது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் 2 தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறை மண்டல துணைஇயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், கேந்திரிய வித்யாலயா மண்டல அலுவலகங்களில் படிவத்தை பெறலாம். தேர்வு கட்டணம் ரூ. 50. இதை ஒரே செலானில் கருவூலத்தில் செலுத்தி, விண்ணப்பத்தை ஆக., 30க்குள் மண்டல அரசு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

படம்
உ லகிலேயே மிகப் பெரிய டெலஸ்கோப் அமைக்கும்  திட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் இந்திய விஞ்ஞானிகள் அமைத்த பிரமாண்டமான ரேடியோ டெலெஸ்கோப்பை தான் இதுவரை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் திட்டத்தில் ஆஸ்த்திரேலியா இறங்கியுள்ளது. “உலகில் தற்போது நவீன டெலஸ்கோப்பை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக ஸ்குவர் கிலோமீட்டர் அர்ரே டெலஸ்கோப் அமைக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகளும் பங்கேற்க வேண்டும். இப்பிரப்பஞ்சம் குறித்த விண்வெளி ஆய்வாளர்களுக்கு இந்த டெலஸ்கோப் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் கிம்கார் கூறினார். உலகிலேயே மிகப் பெரிய டெலச்கோப் அமைப்பது பற்றி தற்போது ஆஸ்த்திரேலிய அமைச்சர் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த திட்டத்தில் ஏற்கெனவே நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. தற்போது இந்திய விஞ்ஞானிகளுக்கும் அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...

நீதிமன்ற வழக்கிலிருந்து தப்புவது எப்படி ?

 சான்பிரான்சிஸ்கோவில் ,ஒரு கடையில் திருடிக்கொண்டிருந்த லேக்  என்பவனை போலீசார் பிடித்தார்கள் .அவன் தன் சட்டையில் மறைத்து வைத்திருந்த சயனடைக் குடித்து இறந்துவிட்டான் . அவனுடைய அறையை சோதனையிட்ட போது ஏராளமான வீடியோ படங்களும் டைரிகளும் கிடைத்தன .          அவனும் அவனுடைய நண்பனான ' சார்லஸ் எங் ' என்பவனும் சேர்ந்து ,பத்தொன்பது பெண்களைக் கற்பழித்துக் கொன்றிருக்கிறார்கள் என்று தெரிந்தது . எங் கைப் பிடித்து கைது செய்தார்கள் .அவனது ரகசிய அறையில் சதைப் பிண்டங்கள் கிடைத்தன.           இது நடந்தது 1985 ஆம் ஆண்டு .ஆனால் எங்கின் மீது இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தண்டனை கிடைக்கவில்லை .காரணம் , ஹாங்காங்கின் செல்வந்தரான வியாபாரி ஒருவனின் மகன் இவன் .     தன வழக்கைத்  தானே வாதாடுவதாகச் சொல்லி ,சட்டப்படி கிடைக்ககூடிய அனுகூலங்களைஎல்லாம் பெற்று வழக்கை நீடித்துக் கொண்டே இருக்கிறான் .            ( நம் ஊர் அரசியல்வாதிகள் இவனிடம் பாடம் கற்கலாம் )

உங்களோட அறிவின்மைக்கு அளவே இல்லையா ?

அண்மையில் இணையத்தில் நான் கண்ட செய்தி " திருமண வயதை 15 ஆக குறைப்பதற்கு இலங்கை அரசு ஆலோசனை செய்து வருகிறது. பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். "    இதை என்னவென்று சொல்வது . ஏற்கனவே சிங்களர்களின் அறிவின்மை உலகம் முழுமையும் அறியும் . இவ்வாறு செய்வது இலங்கை அரசின் அறிவின்மையின் உச்சகட்டமாகும் . பள்ளிப் பருவத்தில்  இருக்கும் பெண்களை இல்லறத்திற்கு தள்ள படுவது என்பது நிச்ச்சயமாக படிபறிவில்லாதவர்கள் கூட செய்வதற்கு தயங்குவார்கள்.    அநேகமாக இது ராஜா பட்சே செய்யும் கோழைத்தனமான  தந்திரம் என்று நான் எண்ணுகிறேன் . ஏனெனில் சிங்களவர்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகபடுத்த வேண்டும் என்னும் நோக்கத்தின் செயல் பாடாகும் . அனைத்து நாடுகளும் முனோக்கி பயணித்துக்  கொண்டிருக்கும் கால  கட்டத்தில்  சிங்களவர்கள் மட்டும் ராவணன் காலத்திற்கு பின்னோக்கிப்  பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் .  குழந்தை பாலியல் தொழிலில் சிங்களவர்கள் முதலிடம், அத்தொழிலை அரசு அங்கீகாரத்துடன் செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த எண்ணம் போலும் .இதற்கு ...