இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

லகிலேயே மிகப் பெரிய டெலஸ்கோப் அமைக்கும்  திட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் இந்திய விஞ்ஞானிகள் அமைத்த பிரமாண்டமான ரேடியோ டெலெஸ்கோப்பை தான் இதுவரை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் திட்டத்தில் ஆஸ்த்திரேலியா இறங்கியுள்ளது.
“உலகில் தற்போது நவீன டெலஸ்கோப்பை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக ஸ்குவர் கிலோமீட்டர் அர்ரே டெலஸ்கோப் அமைக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகளும் பங்கேற்க வேண்டும். இப்பிரப்பஞ்சம் குறித்த விண்வெளி ஆய்வாளர்களுக்கு இந்த டெலஸ்கோப் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் கிம்கார் கூறினார்.
உலகிலேயே மிகப் பெரிய டெலச்கோப் அமைப்பது பற்றி தற்போது ஆஸ்த்திரேலிய அமைச்சர் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த திட்டத்தில் ஏற்கெனவே நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. தற்போது இந்திய விஞ்ஞானிகளுக்கும் அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  ஆஸ்திரேலேயர்களுக்கு இந்தியர்கள் மீதுள்ள ப்ரியம் சென்ற  ஆண்டுகளில்  நடந்த நம்மவர்கள் மீது நடந்த நிறவெறி தாக்குதல்  மூலம் நாம் அறிந்தது தான். இந்திய விஞ்ஞானிகள் செல்வார்களா ? 
நன்றி : வணக்கம்  மலேசியா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது