இந்தியாவின் ஆதரவு "ஜி மெயிலுக்கே" ........
கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யாரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அளவிற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக்கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும்.
ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக்காட்டிலும் இருமடங்குக்கு மேலாக இந்திய வாடிக்கையாளர்கள் இருப்பதாக, அமெரிக்கா வில் இயங்கும் காம்ஸ் கோர் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. 62% மக்கள் இந்தியாவில் இதனைப் பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக, இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டில், 41% பேர் ஜிமெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 29%. இந்தியாவில் தான் கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாகவும், இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்றி - செய்தி.காம்
கருத்துகள்