தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பம்

தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தில் மாணவர்களை தேர்வு செய்ய நவ., 20 ல் தேர்வு நடக்க உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆக., 30 வரை வழங்கப்படும். கடந்த கல்வி ஆண்டில் 7ம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் பெற்று, தற்போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சத்திற்கு மிகக்கூடாது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் 2 தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறை மண்டல துணைஇயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், கேந்திரிய வித்யாலயா மண்டல அலுவலகங்களில் படிவத்தை பெறலாம். தேர்வு கட்டணம் ரூ. 50. இதை ஒரே செலானில் கருவூலத்தில் செலுத்தி, விண்ணப்பத்தை ஆக., 30க்குள் மண்டல அரசு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...