திருப்பூர் தற்கொலை நகரமா?

               தமிழ்நாட்டில் உள்ள  தொழில் நகரங்களில் முக்கியமான தொழில் நகரம் திருப்பூர் . எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும் நகரம் . நான் கல்லூரி படிக்கும் காலங்களில் , திருப்பூரில் பைக் ஓட்டுவது மிகவும் சாவலான விஷயம்(    மூன்று ஆண்டுகள் என் கல்லூரி காலங்கள் திருப்பூரில் தான் கழிந்தது) .அந்த அளவிற்கு சாலைகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.இன்றும் திருப்பூர் சென்றால் , பனியன் மூட்டைகளை பைக்கில் வைத்து , எவ்வளவு சிறிய குறுகலான சாலையிலும் , அலட்டிக்காமல் ஓட்டி  செல்லும் மனிதர்களை பார்க்காமல் இருக்கமுடியாது. திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் இல்லாத தெருக்களே கிடையாது. ஒரே சிறிய அறையில் இயங்ககூடிய கம்பெனியிலிருந்து பெரிய அடுக்குமாடி கட்டடித்தில் இயங்ககூடிய கம்பெனிகள் வரை ஏரளாமான கம்பெனிகள்  உள்ளன . தென் தமிழக மக்களுக்கு வாழ்க்கை கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கும் மாநகரம் .ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர், கடந்த 20 ஆண்டுகளில் வியக்கத்தகுந்த தொழில் வளர்ச்சியை எட்டியது. சனி ,ஞாயிறு நாட்களில் கீழ்த்தட்டு மக்களிடம் கூட சர்வ சாதரணமாக 1000 மற்றும் 500 பண நோட்டுகளை காணலாம் .ஒவ்வொரு வார இறுதியிலும் , பல கோடிகளில் வர்த்தகம் நடைபெறும். இன்று சாயப் பட்டறை பிரச்சனை காரணமாக நலிந்த நகரமாக காணப்பட்டாலும் விரைவில் மீளும் என்ற நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு தகுதியுடைய நகரம். இத்தகைய சிறப்புகள் மட்டுமல்லாது அதிகளவிலான தற்கொலைகள் நிகழும் மாவட்டமாகவும் திருப்பூர் உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆனால் அது தான் உண்மை  , நாளுக்கு நாள் திருப்பூரில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது .திருப்பூர் மாநகரில் தற்கொலை சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஜூலை வரையிலான 7 மாதங்களில் 357 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.கடந்த 2009ம் ஆண்டு மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 542 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2010ல் இது மேலும் அதிகரித்து 570 பேர் தற்கொலை செய்து உயிரிழந்தனர். இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியடைந்தனர்.
நடப்பாண்டில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 7 மாதத்தில் மட்டும் தற்கொலை செய்து இறந்தவர்களின் எண்ணிக்கை 357. நடப்பாண்டில் மாதம் சராசரியாக 51 பேர் இறக்கின்றனர். இது கடந்தாண்டின் மாத சராசரியைவிட 7 அதிகம். கடந்தாண்டைவிட 12 சதவீத தற்கொலை நடப்பாண்டில் அதிகரித்துள்ளன.
இது காவல்துறை வெளியிடும் புள்ளிவிவரம் மட்டுமே. ஏராளமான தற்கொலை வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாவதில்லை. அதை கணக்கெடுத்தால் இதன் எண்ணிக்கை 2 மடங்காகும் என கூறப்படுகிறது. தற்கொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 61 சதவீதம் பேர் ஆண்கள். கடந்த 2009ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 542 பேரில் 315 பேரும், 2010ல் 570 பேரில் 348 பேரும், 2011ல்(ஜூலை 31 வரை) 357 பேரில் 216 பேரும் ஆண்கள். சராசரியாக தற்கொலை செய்பவர்களில் 61 சதவீதம் பேர் ஆண்கள். 33 சதவீதம் பேர் பெண்கள். 2 சதவீதம் பேர் சிறுவர்கள். 4 சதவீதம் பேர் சிறுமியர்கள். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது காவல்துறையின் புள்ளிவிவரம் ஆகும். 
          தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி ஒரு முக்கிய காரணமாக சொல்லப் பட்டாலும் , அது மட்டுமே இந்த தற்கொலைகளுக்கு காரணமாகாது .குடும்ப பிரச்சினைகள் ,  பக்குவமற்ற வயதில்  நடைபெறும்  திருமணங்கள்  , ஓரளவு கணிசமான வருமானம் கிடைப்பாதல் போதை பழக்கங்களுக்கு  அடிமையாதல் போன்ற பல சிக்கல்கள் காரணமாக அமைகிறது .இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கூறுகையில், வந்தாரை வாழவைக்கும் நகரமாக விளங்கிய திருப்பூர், பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்கொலை நகரமாக மாறி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. தற்கொலைகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழு முறையாக செயல்படவில்லை. தொழில் நெருக்கடியால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சங்கங்கள் தற்கொலை தடுப்பு குழுவில் இடம்பெறாமல் உள்ளது சரியானது அல்ல. தொழிற்சங்க நிர்வாகிகளை கூட்டி தற்கொலை தடுப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்றார்.
        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது