என்னமோ? எதோ ? சில தகவல்கள்
சொந்த வேலைகள் காரணமாக கடந்த நான்கு தினங்களாக இடுகை எழுத முடியவில்லை . என்ன எழுதுவது என்று தெரிய வில்லை .அதனால் நான் படித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் புனித அல்ஃபோன்சா இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.
காந்தியடிகளுக்குத் தமிழில் கையொப்பமிடக் கற்றுத் தந்தவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார்.
பொதுவாக எல்லா நொதிகளும் புரதங்களே என்று பலகாலமாய் நம்பப்பட்டு வந்தது. பின்னரே ரிபோசைம் எனும் நியூக்ளிக் அமிலங்களும் நொதிகளாய்ச் செயல்படுவது கண்டறியப்பட்டது.
இராவண காவியத்தை எழுதிய புலவர் குழந்தை தந்தை பெரியாரின் கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார்.
எறும்பு தின்னிகளின் இரைப்பையில் செரிமானத்திற்குதவும் ஐதரோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுவதில்லை. அவை தங்களின் இரையான எறும்புகளின் உடலில் உள்ள ஃபார்மிக் அமிலத்தையே செரிமானத்திற்கு நம்பி உள்ளன.
மொகலாயர்களின் வரலாற்றை உலகறியச் செய்த அக்பர் நாமாவின் ஆசிரியர் அபுல் ஃபசல் மொகலாய இளவரசன் ஜகாங்கீர் தீட்டிய சதியால் தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அதிக ...