மாணவர்களிடையே தொழில் திறனை ஊக்குவிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய திட்டம்

 பொறியியல் மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் தொழில்முனையும் திறனை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - ஐ-ஸ்பர்க் - என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இந்த புதிய திட்டம் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவன மேம்பாட்டுப் பிரிவின் முதுநிலை துணைத் தலைவர் எஸ். சோமசேகர், பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோர் அளித்த பேட்டி:  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் "ஐ-ஸ்பர்க்' என்ற திட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களிடையே புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, அவர்களிடையே புதைந்து கிடக்கும் தொழில்முனையும் திறனை வெளிக் கொணருவது ஆகியவையே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இதுவரை இந்தியாவில் 5 மாநிலங்களில் 25 கல்லூரிகளில் இந்தத் திட்டத்தை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், பல்கலைக்கழத்தில்  அறிமுகம் செய்வது இதுதான் முதல் முறை. பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 5.7 லட்சம் மாணவர்களும் இதன் மூலம் பயன்பெற முடியும்.  எந்தவித கட்டணமும் இன்றி, தங்களிடம் புதைந்துள்ள திறனை இந்தத் திட்டம் மூலம் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.  மாணவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதற்காக பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு மாணவருக்கும் தனி குறியீட்டு எண் வழங்கப்படும்.www.dreamspark.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்து, இந்த சேவையை மாணவர்கள் பெற முடியும்.  இந்த இணைய தளத்தில் உள்ள மென்பொருள்களையும் மாணவர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றனர்.  மேலும், இந்தியாவின் முன்னணி கல்லூரிகளிலிருந்து நேரடியாக மாணவர்களைத் தேர்வு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று சோமசேகர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது