வெளி வராத தமிழ் படங்கள் - 2
இந்த பதிவு வெளி வராமலே போன தமிழ் படங்களை பற்றி நினைவு கூறலின் தொடர்ச்சி ஆகும் .
உள்ளம்
இந்தப் படம் பிரபல இயக்குனர் கதிரின் இணை இயக்குனர் அருண் மூர்த்தி அவர்களின் முதல் படமாகும் . இத்திரைப் படத்தில் நாயகனாக மிதுன் நடிக்க , நாயகிகாளாக தீபு மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்தனர் .பிரியாமணியின் முதல் படமான "கண்களால் கைது செய்" படத்தில் நடிக்கும் போதே இந்த படத்திலும் நடித்தார் ..அவர்களுடன் ரகுவரன் ,அம்பிகா , அனுஹாசன் ,கருணாஸ் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் நடித்தனர் .2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது .இப்படத்தில் மொத்தம் உள்ள ஐந்து பாடல்களும் ஜனவரி 10 ,2004 இல் வெளியிடப்பட்டது .யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் . இந்த படத்தின் கதை முக்கோண காதல் கதை என்றும் , இளைங்கர்களுக்கான படம் என்றும் பேசப்பட்டது . இந்தப் படமும் இன்று வரை ரீலிஸ் ஆகவில்லை
.படக்குழுவினர் விபரம்
கதை ,திரைக்கதை , இயக்கம் , வசனம் : அருன்மூர்த்தி தயாரிப்பு : வேத மூர்த்தி MVM Productions ,இசை ; யுவன் சங்கர் ராஜா ,படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ், ஒளிப்பதிவு : U.K. செந்தில் குமார் ,
இந்தத் திரைப்படம் கரு பழநியப்பன் அவர்களால் இயக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு மே மாதம் ரீலிஸ் ஆவதாக இருந்தது .இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர் .இதில் ஸ்ரீகாந்துக்கு துடிப்பு உள்ளம் கொண்ட பத்திரிகை நிருபர் வேடம். கரு .பழனியப்பன் கூறுகையில் இந்தப் படம் காதல் மற்றும் மேன்மையான கருத்துகள் நிறைந்த படம் என்று கூறியிருந்தார் .இந்தப் படத்தில் ஆறு பாடல்களுக்கும் வித்யாசாகர் இசையமைத்திருந்தார் . இந்தப் படத்தின் பாடல்களும் பெரிய அளவில் பேசும் படியாக அமைந்திருந்தது .இந்த படத்தை ஸ்ரீகாந்தும் எதிர் பார்த்திருந்தார் .மீண்டும் இப்படம் 2010 நவம்பரில் ரீலிஸ் செய்ய படுவதாக இருந்தது .ஆனால் இன்றும் ' சதுரங்கம் ' ஆட படாமலே இருந்து வருகிறது .
படக்குழுவினர் விபரம்
கதை , திரைக்கதை ,வசனம் ,இயக்கம் ; கரு. பழனியப்பன் இசை ; வித்யாசாகர் , தயாரிப்பு : S.Sதுரைராஜ் "MASS MOVIE MAKERS " , ஒளிபதிவு ; திவாகரன் , கலை : ராஜீவன்
கருத்துகள்