" காஸ்ட்ரோவின் ஆசை "
நாற்பது ஆண்டுகளாக கியபாவின் கம்யுனிஸ்ட் சர்வாதிகாரியாக கொடிகட்டிப் பறக்கிறார் காஸ்ட்ரோ .ஆனால் திருப்தியில்லை .முன்னொரு வருடங்களுக்குப் பிறகும் தன் பெயர் பிரகாசிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்து திட்டம் தீட்டி அரசாங்க அறிக்கையாக வெளியிட்டுள்ளார் .
காஸ்ட்ரோ |
அதன் படி , 'ஹவனா' என்ற தலை நகரின் பெயர் காஸ்ட்ரோ என்று மாற்றப்படும் . அவர் உடல் பாடம் செய்யப்பட்டு ,' புரட்சி சதுக்கத்தில் ' கண்ணாடி சமாதியாக வைக்கப்படும் ( மாஸ்கோவில் லெனின் உடல் இருப்பது போல ) .
பாடம் செய்யப்பட லெனின் உடல் |
அவர் இறக்கும் தினத்தன்று ரேடியோவிலும் , டெலிவிசனிலும் அவருடிய சொற்பொழிவுகள் நாள் பூரா ஒலிபரப்பப் படும் .பள்ளிக்கூடங்கள் ,ஆஸ்பத்திரிகள் , தொழிற்சாலைகளுக்கு அவர் பெயர் சூட்டப்படும் .நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும் .எதிரிகள் கைதாவார்கள் . ( வரலாறு மிக முக்கியம் அமைச்சரே ) ( இந்த விஷயம் நாம அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை போலும் )
உடலைப் பாடம் செய்து பாதுகாப்பது இந்த சர்வாதிகாரிக்கு பிடித்த விஷயம் .1970 ஆம் ஆண்டு அதிகமான பால் கொடுத்து ரெக்கார்டு ஏற்படுத்திய ஒரு பசுமாட்டைப் பாடம் செய்து இன்றளவும் பாதுகாத்து வருகிறார் .
கருத்துகள்