சிவி (CV - Curriculum Vitae) -யை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்?
1. வேலைவாய்ப்பு விளம்பரத்துக்குப் பதில் அனுப்பும் போது
2. வேலைக்கு விண்ணப்பிக்கும் போது
3. உயர் கல்வி பெற விண்ணப்பிக்கும் போது
4. தகுதியின் அடிப்படையில் உதவித் தொகை பெறுவதற்கு
5. யாரும் வேலைக்கு கேட்காமலேயே வேலை பெறுவதற்கு இந்த சிவி-யைப் பயன்படுத்தலாம்.சிவி(CV - Curriculum Vitae) தயாரிப்பின்
நோக்கம்:இந்த சிவி தயாரிப்பு என்பது வேலை பெறுவதற்காக மட்டும் அல்ல. உங்கள் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்; இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்; இக் குறைந்த கால, நிகழ்கால அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்; அதனை எப்படிச் செய்யப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே ஆலோசித்துக் கொள்வதுதான் சிவி-யின் முக்கியமான நோக்கம்.விளையாட்டுப் போக்காக சிவி-யையோ, ரெஸ்யூமையோ தயாரிக்கக் கூடாது. இது உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் இலக்கு நோக்கிய பயணம். அதற்காக ஆயத்தப்படுத்தும் தயாரிப்பு. இந்தத் தயாரிப்பு சரியானதாக இருக்கும்போது, கவலைப்பட வேண்டிய அவசியம் வராது. அதனால், சிவி-யை அக்கறையுடன் தயாரிப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில், இந்த சிவி-தான் உங்கள் கல்வித் தகுதி, நீங்கள் பெற்ற அனுபவங்கள், அதன் மூலம் நீங்கள் செய்யப்போகும் வேலைகள் அனைத்துக்கும் ஆதாரமாக அமையப்போகும் ஒரு நற்சான்று என்று கூடச் சொல்லலாம்.
கருத்துகள்