வெட்டியா இருக்கிறது எம்புட்டு கஷ்டம் தெரியுமா?
காலையில் 9, 10 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும்ப வேண்டியது. கணிணியின் திரை பேஸ்புக், ருவிட்டர், ஜிமெயிலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது. இடையில் டாய்லெட்டுக்கு மட்டும் அடித்துப்புரண்டு ஓடவேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையே 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு. கூடவே மாலையில் உறங்க 2மணிநேரம். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. கணனி பிழைத்துவிட்டால் மட்டும் ஆறாவது அறிவுக்கு வேலை. கேட்டால் வெட்டி ஒபீசர் என்று பீத்திக்கொள்வது.
இப்படியெல்லாம் திட்டு வாங்கியிருக்கீங்களா? கவலை வேண்டாம். வெட்டியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
காலை 9, 10 மணிக்கு எழுந்து காபி கூட குடிக்காம கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து கலைஞர் என்ன சொன்னாரு, கமல் என்ன சொன்னாரு, உயர் திரு வினோத் என்ன சொன்னாரு, டாட்டா ஓனர் என்ன சொன்னாரு, ஏன் பில்கேட்ஸ் என்ன சொன்னாரு வரைக்கும் அத்தனையையும் பிங்கர் டிப்ஸ்ல வச்சுக்கிட்டு, அப்பிடியே கிறிக்கட் பக்கம் போய் யாருக்காவது மொக்கை போடலாமானடனு பாத்து சூதாட்டத்தில மாட்டிக்கிட்வனை தூக்கு மாட்டிக்கிற அளவுக்கு கமண்ட் அடிச்சு எல்லாரையும் சிரிக்க வச்சு, கஷ்டப்பட்டு யோசிச்சு மூளைய முழுசாப் பாவிச்சு மொக்கையா பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டச போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா எவனாச்சும் வந்து கமண்ட் அடிப்பான்.
உடனே அவன் மனசு நோகக்கூடாதுன்னு அவனுக்கும் ரிப்ளை பண்ணிட்டு ஆஃப்லைன்ன ஒன்லைன் போனா பத்து வருசத்துக்கு முன்னாடி படிச்ச பால்பாண்டி படக்குன்னு வந்து ஹாய் சொல்லுவான். சரி அவனையும் போர்மாலிட்டிக்கு விசாரிச்சு பழைய கதையெல்லாம் பேசி முடிச்சுப்பார்த்தா மணி 1.30 ஆகிரும்.
எல்லாத்தையும் அப்பிடியே போட்டு 5 நிமிசம் செலவழிச்சு அரைகுறையா சாப்பிட்டு அடிச்சுப்புடிச்சு ஓடோடி வந்தா பால்பாண்டி பாசாகிப் போயிருப்பான். சரி என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது எவனாச்சும் வந்து
“பன்றிக்கு நன்றிசொல்லி குன்றின்மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை அது என்ன?.
அப்பிடின்னு ஒரு கேள்வியக்கேக்க கூகிள்ல தேடுதேடுன்னு தேடி விடையே கிடைக்காம இருக்கும் போது மறுபடியும் நம்ம அறிவைப் பாவிச்சு(நம்புங்கப்பா) கேள்விக்கு விடையக் கண்டுபிடிச்சுக்கொடுத்தா, THANKSன்னு சொல்லிட்டு ஒரு ஸ்மைலி போடுவான் பாருங்க அதுதாங்க சந்தோஷம்.
இம்புட்டு வேலையையும் முடிச்சுட்டு பார்த்தா நேரம் 5 மணி ஆத்தாடி 5 மணியாகிரிச்சேன்னு ஒரு TEAயக்குடிச்சிட்டு மல்லாக்கபடுத்தா வரும் பாருங்க ஒரு தூக்கம். அதுக்கப்புறம் 9 மணிக்கு ஒன்லைன் வந்து 2, 3 மணிவரைக்கும் அதே வேலைய செய்திட்டு ஒண்ணுமெ செய்யாத வெட்டிப்பயன்னு தன்னைத்தானே சொல்லிக்கிறான் பாருங்க, அந்தப்பெருந்தன்மை யாருக்கு வரும்.
நோ.. நோ.. என்னைப்பார்த்து நீங்க இந்தப்பாட்ட பாடுறது புரியுது.. பட் இதுக்கெல்லாம் அழக்கூடாது..: என் இனமடா நீ ...
கருத்துகள்