மாம்பழங்களை கால்சியம் கார்பைடு உபயோகித்து பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்

கால்சியம் கார்பைடு(CaC2): இது ஒரு ரசாயனப் பொருள். சுத்தமான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலையில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக்கும். இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப் பொருட்கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளியேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது




உடல்நலக்கேடு: கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதன் அளவு அதிகமாகும்போது புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 33-35 சதவீத அசிட்டிலின் வாயுவை ஒருவர் சுவாசித்தால் 5-7 நிமிடங்களில் மயக்கமடையலாம். கார்பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை உண்ணக்கூடாது. பழங்களின் மேற்தோல் ஒரே சீராக மாறி இருந்தால் அது கல்வைத்து பழுக்க வைத்தது என்பதை கண்டறியலாம். தெரிந்தோ தெரியாமலோ கல்வைத்து பழுத்த பழங்களை வாங்கினால் தண்ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பழத்தை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உண்ணலாம். இப்பழங்களை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க இயலாது. மாம்பழ சீசன் துவங்கியஉடனே சந்தைக்கு வரும் பழங்கள் பெரும்பாலும் கல்வைத்து பழுக்க வைத்ததாக இருக்கலாம். பொதுவாகவே ஜூன்-ஜூலை மாதங்களில் சந்தைக்கு வரும் பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைத்தவையாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது