கலீல் கிப்ரான்
இந்தியாவில் உன்னதமான கவி புல மிக்க கவிஞர்கள் எத்தனையோ பேர் தங்களது எழுத்துகளின் மூலம் இந்திய மண்ணுக்கு பெருமையையும் , மரியாதையையும் சேர்த்து வந்தனர் . அதே போல் அயல் நாட்டு கவிஞர்களும் தங்களது படைப்புகளின் மூலம் அநேக மக்களின் மக்களை கொள்ளைக் கொண்டதோடு நில்லாமல் வாழ்வியல் நெறிகளையும் தந்து விட்டு சென்றனர் .அவர்களுள் ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் போன்றோர்களின் படைப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை . இவர்களுள் என்னை கவர்ந்தவர் கலில் கிப்ரான் .அவரை பற்றி என் அறிவுக்கு எட்டியவை சில உங்களுக்காக :
கலில் கிப்ரான் (Khalil Gibran) |
கலில் கிப்ரான் (Khalil Gibran) லெபனான் நாட்டைச் சார்ந்த கலைஞர், கவிஞர், எழுத்தாளர்.அவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகிக்கின்றன. கலில் கிப்ரான் எழுதிய புத்தகங்கள் ஓவ்வொரு மனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பபவை. தத்துவஞானியும் கவிஞருமான கலீல் கிப்ரானின் பொன்மொழிகள் தமிழ் உட்படப் பல மொழிகளில் வெளி வந்து உள்ளன .லெபனானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் இவர் .' ப்ராப்ட் ' என்ற இவரது முதல் நூல் வெளி வந்து 95 வருடமாகிறது .கிப்ரானைப் பற்றிய பல புத்தகங்கள் பிரசுரமாகியுள்ளன .
கிப்ரான் , அமெரிக்காவில் குடியேறிய சமயம் படங்கள் வரைந்து வாழ்க்கையை தொடங்கினார் .பிறகு நூல்கள் வெளியிட்டார் .கீழை நாடுகளிலிருந்து வரும் தத்துவஞானிகளுக்கு அமெரிக்காவில் அமோக மதிப்பு இருந்த காலம் அது .கிப்ரானை ' இரண்டாவது தாகூர் ' என்றார்கள் சிலர் .தான் இதற்கு முன் பல ஜென்மங்கள் எடுத்திருப்பதாகவும் அதில் ஒன்று இயேசு கிறிஸ்து என்றும் கிப்ரான் கூறிக்கொண்டார் .' ஹாஸ்கெல் ' என்ற பெண்மணி அவரை இயேசு கிறிஸ்து என்றே மதித்துப் போற்றி அவர் வசதியாக வாழ உதவினார் . குடலில் புண் ஏற்பட்டு கிப்ரான் காலமானதால் மதுபானப் பழக்கம் அளவுக்கு மீறி இறந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள் .
நான் ஆசிரியராக பணி புரிந்தவன் என்பதால் அவரது பொன் மொழிகளில் என் மனதை நெருடிய வரிகள்
" உங்கள் குழந்தையை படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள் , படிக்கின்ற ஆசிரியரிடம் ஒப்படையுங்கள் "
கருத்துகள்