நாம் நினைவாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?

என்னால் படித்ததை நினைவில் வைக்க முடியவில்லை' என சில மாணவர்கள் ஆதங்கப்படுவார்கள் . அத்தனை செய்திகளையும் மூளையில் போட்டு வைத்தால் அது எப்படி தாங்கிக் கொள்ளும் என்றும் சிலர் கருத்துச் சொல்வார்கள்.
ஆனால் `மனித மூளைக்கு மிக அபார திறமை இருக்கிறது' என ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இவர்கள் மனித மூளையில் இரண்டு ``குயிண்டிலியன்'' (Quintillion) அளவுக்கு சின்னசின்ன செய்திகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் '' என்று ஆராய்ந்தும் சொல்லியிருக்கிறார்கள்.


அதாவது `ஒன்று' என்ற எண்ணிற்குபிறகு 18 பூஜ்யங்களை சேர்த்தால் எவ்வளவு மதிப்புவருமோ அதுதான் `குயிண்டிலியம்' என்பதன் மதிப்பாகும். அதாவது மனித மூளையின் சக்தி 40 விதமான மொழிகளை நினைவில் கொள்ளுகின்ற அளவுக்கு `அபாரசக்தி' கொண்டது.
 
 
இப்படி அதிக கொள்ளளவு கொண்ட மனித மூளையில் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி , சேமித்து பாதுகாப்பாக முறைப்படி வைக்காததுதான் இன்றைய மாணவ,மாணவிகளின் குறைபாடாகும்.
 
ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்கிவைக்கப்படவில்லை. இதனால் நமக்குத் வேண்டிய புத்தகத்தை உடனே கண்டுபிடிக்க இயலாது. தேவையான புத்தகத்தை எளிதான முறையில்கண்டறிவதற்கு ``புத்தகப்பட்டியல் அடங்கிய குறிப்பேடும் (Catalogue) அவசியம் தேவை''
 
இந்த நூலகம் போலவே நமது மூளையும் ஒரு ``ஓழுங்கில்லாத நூலகம்'' (Dis-Organised) ஆகும். தேவையான புத்தகங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் கண்டுபிடிக்க உதவும்.
 
 
குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் நினைவில் கொள்ள நமது மூளைக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை , குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டுவரும் ``நினைவாற்றல் கலையை'' வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்க்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ``தொடர்பு ஏற்படுத்துதல் முறை' '(ASSOCIATION) முறை ஆகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு `தொடர்புப்படுத்துதல்' மிகவும் உறுதுணையாக அமையும்.
 
சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமையிலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்.
 
உதாரணமாக பக்கத்து வீட்டில் பாம்பு வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ``பாம்புபாம்பு''சத்தம்போட்டு அழைக்கிறார்கள். அவர்கள் அருகில் சென்று ``பாம்பு எங்கே சென்றது ?'' என்று கேட்டு நாமும் தேட ஆரம்பிப்பதற்குள், நமது மனதில் எத்தனையோ விதமான எண்ணங்கள் வந்து நிழலாடும். சின்னக் குழந்தையாய் இருந்தபோது பள்ளியில் பார்த்த பச்சைப் பாம்பு , பாம்பு கடித்து இறந்து போன மாமா பையன், பாம்பு வடிவில் சினிமாவில் வந்த நாகக்கன்னி. பாம்பு கடிக்கு அரைக்குறையாய் தெரிந்து வைத்திருந்த சித்த மருத்துவம் . இப்படி கூடைகூடையாய் துண்டுத் தகவல்கள் பாம்பைப்பற்றி நம் எண்ணத்தில் தோன்றும். இவையெல்லாம் நாம் அறிந்தோ அறியாமலயோ தெரிந்து வைத்த தகவல்கள் தானே?
 
எனவேதான் ``ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒருதகவலைக் கவனமாக நினைவில் கொண்டால் அந்தத்தகவல் மனதில் நிலைத்து நிற்கும்'' என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
 
உதாரணமாக நீங்கள் கீழ்க்கண்ட பத்து வார்த்தைகளை வரிசையாக நினைவில் வைக்க வேண்டும் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம்.
 
1. மேஜை.
2. நண்பர்கள்.
3. வியாபாரம்
4. உரையாடல்
5. பழக்கவழக்கம்
6. விளையாட்டு
7. செய்தி அறிதல்
8. பாசம் கொள்ளுதல்
9. வெற்றி
10. படிப்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை வரிசையாக நினைத்துக்கொள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே நீங்கள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
 
 
உதாரணமாக ஒரு புதிய சூழலை மனதில் உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் பலசரக்குக் கடை மேஜை அருகே உங்கள் நண்பர்கள் வந்து நின்று நீங்கள் வியாபாரம் செய்வதை கவனிக்கிறார்கள். நீங்கள் வாடிக்கையாளரிடம் உரையாடல் செய்வதைப் பார்க்கிறார்கள். உங்கள் பழக்கவழக்கம் ஒரு விளையாட்டைப் போல இனிமையாக இருக்கும் செய்தி அறிந்ததால் உங்கள் மீது பாசம் கொள்கின்றார்கள் . உங்கள் வியாபார வெற்றி , உங்கள் சிறந்த படிப்பினால் தான் உருவானது என எண்ணுகிறார்கள்.
 
இப்படி தொடர்பை ஏற்படுத்திப் பார்த்தால் மேலேகுறிப்பிட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் வரிசையாக மனதில் தங்கிவிடும்.
 
நினைவாற்றலை வளர்க்க உதவும் இன்னொரு முறை ``காட்சிப் படுத்துதல்'' (Visualisaion) ஆகும். அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களால் பெறப்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை காட்சியாக மனதில் உருவாக்கி நினைவில் நிறுத்திக் கொள்வதை இது குறிக்கும்.
 
இந்த முறையில் ஒரு தகவலை நினைவில் வைத்து கொள்ளும்போது கற்பனை (Imagination) செய்து , ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். படைப்புத்திறன் (Creative power) மூலம் நினைவில் கொள்ளும் இந்த முறையை பல மாணவிகள் தங்களின் ` நினைவாற்றலை' வளர்த்துக் கொள்ள பயன்படுத்துகிறார்கள்.
 
 
உதாரணமாக வரலாற்றுப் பாடத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஒரு மாணவன் விரும்புகிறான். இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ள இந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை தந்த காலத்தையும் , அவர்களுடைய நாகாறிக முறை எப்படி அமைந்திருக்கும்? என்பதையும் முதலில் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு வந்த போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா `கோழிக்கோடு' என்னுமிடத்தில் கடற்பயணம் மூலம் வந்தததையும் , அங்கு போர்ச்சுகீசியர்கள் வீழ்ந்த நிலையினையும், அதன் பின் டச்சுக்காரர்கள், டேனியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வந்த நிகழ்வுகளையும் அப்படியே மனதில் பதிய வைக்கலாம்.
 
உங்களை ஒரு கடற்பயண வீரராகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்களே இந்தியாவிற்கு வருவதைபோலவும், இந்தியாவிலுள்ள வாழ்க்கை முறை, வீடுகள், கைவினைக்கலை, உடைகள், தொழில்கள் ஆகிய முக்கியமானவற்றை நீங்கள் பார்ப்பதாக எண்ணி கொள்ளுங்கள். மேலும் , நீங்கள் அந்த முக்கியமான இடங்களில் வாழ்வதை போலவே கற்பனையை உருவாக்கி கொண்டு அந்த காட்சிகளை ஒரு தொலைக்காட்சி தொடர் போல நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இதனால் வரலாற்று பாடத்திலுள்ள காட்சிகள் நினைவுப்படுத்த வேண்டிய நேரத்தில் நம் நினைவில் எளிதில் வந்து தோன்றும்.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது