பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய பேருந்துகளின் மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக செல்வேன் .. பெரும்பாலான பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்த...
உ லகில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதைகள்படித்து உள்ளோம் .. அதை உணர்ந்தும் உள்ளோம் ... அப்படியொரு கதை தான் இது .. அதில் ஒரு விசித்தரமான தகவலும் உள்ளது பரோ மன்னர்கள் எகிப்து நாட்டை ஆண்டு வந்த காலம் . அம்மன்னர்கள் தங்களுடைய சொந்த சகோதரிகளையோ இல்லை பெற்ற பெண்களையோ தாரமாக ஏற்று உறவு முறையை மிகவும் கொச்சைபடுத்தினார்கள் .யார் -யார் உறவு என்கிற பாகுபாடே இல்லாமல் போய்விட்டது .. இந்த மாதிரியான ஒரு கேவலமான முறை அழிந்து போக காதலும் ஒரு காரணமாக அமைந்தது .. ரோமானியார்கள் ஆட்சிக்குள் நுழைந்த போதுதான் இந்த விதமான மூட பழக்கங்களை அறவே ஒழிக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள் .. ஜூலியஸ் சீசர் என்னும் மாவீரன் விழுந்தது கிளியோபாட்ராவின் புத்திசாலிதனத்திலும் , அபரிவிதமான அழகிலும் தான் ... இரண்டு உள்நாட்டு போரின் விளைவாக இருவரும் ஒன்று சேர்ந்தனர் . அதில் ஒன்று ரோம் நகரில் இரு பிரிவினர்களுள் ஏற்பட்ட யுத்தம் ஒன்று , மற்றொன்று மிகவும் விசுவாசிகளாக இருந்த எகிப்தியர்களிடையே நட...
சாகுல் ஹமீது இன்று மாலை நேரம் நான் கணிபொறி உடன் இயங்கி கொண்டிருந்த நேரத்தில் , நான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் வரிசையில் , 'திருடா திருடா' படத்தில் வரும் 'ராசாத்தி' எனத் தொடங்கும் பாடல் கேட்க நேர்ந்தது . ஒரு கணம் , மனம் லேசாக மாறியது ,என்ன ஒரு இனிமையான குரல் .இரு முறை ஒலிக்கவிட்டு கேட்டேன் .அதே சமயத்தில் அந்த இனிமையான குரலுக்கு சொந்தம் கொண்ட ஜீவன் , இன்று நம்முடன் இல்லையே என்று ஒரு விதமான ஏக்கம் கொண்டேன் . ஆம் இந்த குரலுக்கு சொந்தக்காரர் , சாகுல் ஹமீது . A.R ரஹ்மானுடன் தொடக்க காலத்தில் இணைந்து பணி புரிந்து உள்ளார் .இவரது பாடல்கள் பெரும்பாலும் ஏ. ஆர். ரகுமான் இசைத்த தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளன. 1980களில் சாகுல் ஹமீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி வந்தார். 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்தென்றல் மற்றும் சில நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் 1989ல் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து தீன் இசை மழை என்ற இஸ்லாமிய இசைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்றார். இன்றும் நீங்கள் அவர் பாடிய பாடல்களை கேட்க நேரிட்டால் , நிச்சயம் அந்தக் குரலின் அழகை உணரலாம் .உசிலம்பட்டி பெ...
கருத்துகள்