வெளி வராத தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளி வந்து வெற்றியையோ, தோல்வியையோ  தழுவுகின்றன . ஆனால் ஒரு சில  படங்கள் வெளி வராமலே பொட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன . அந்த படங்களை நாமளாவது நினைவு கூறுவமே , என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு .

1. கோடீஸ்வரன் 
எபி குஞ்சுமோன்  மற்றும் கரிஷ்மா கபூர்

   இந்தப் படம் பிரபல தயாரிப்பாளர் kt குஞ்சுமோனின் மகன் எபி குஞ்சுமோன் ஹீரோவாக நடித்து, அவராலே(kt குஞ்சுமோன் ) தயாரிக்கப்பட்டது . kt  குஞ்சுமோன் ஜென்டில் மேன், காதல் தேசம் போன்ற வெற்றி படங்களின் தயாரிப்பாளார் . காதல் தேச வெற்றிக்கு பிறகு , நடிகர்  அப்பாஸை வைத்து இந்தப் படம் தயாரிப்பதாக  இருந்தது .ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக , எபி குஞ்சுமோனை( 18 வயதில்  ) அறிமுகபடுத்தப் பட்டு , நடிக்க வைக்கப் பட்டது . அவருக்கு  ஜோடியாக கரிஷ்மா கபூர் , சிம்ரன் ஆகியோர் நடித்தனர் .அது மட்டுமின்றி ஜெயபிரதா, அம்பிகா , லதா, சுகுமாரி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்தனர் . இந்த படத்திற்கு கதையை kt குஞ்சுமோனே எழுதினார் . இத்திரைப்படம் 1997 இல் தொடங்கபடுவதாக இருந்தது , ஆனால் தமாதமாக 1998 இல் தொடங்கப்பட்டது .அதே ஆண்டு தீபாவளிக்கு வெளியீடபடுவதாக இருந்து , டிரைலரும் பாடல்களும்  வெளியீட பட்டது . ஆனால் போஸ்ட் production வேலைகளின் காரணமாக ரீலிஸ் தேதி 1999 ஜனவரி 26 க்கு தள்ளி போனது .ஆனால் எதிர் பார்க்கப்பட்ட படம் இன்றளவும் ரீலிஸ் ஆகவில்லை .இந்த படத்தின் இயக்கம் : நந்த குமார் , இசை : அகோஷ் , பாடல்கள் : வைரமுத்து ,ஒளிபதிவு :ஜெயணன், நடனம் : ராஜ சுந்தரம் ,தருண் குமார் .
 

2.காதல் சாம்ராஜ்யம். 

             இந்தப் படம் தமிழ் சினிமா நட்சத்திர வாரிசுகளின் படம் என்றே சொல்லலாம் .2002 இல் காதல்க்கோட்டை திரைப்பட வெற்றிக்கு  பிறகு    , அந்த பட இயக்குனர் அகத்தியன் அவர்களால் நகைச்சுவை   படமாக தொடங்கப்பட்டு   அதே ஆண்டில் முடிக்கப்பட்டது . இந்தப் படத்தின் தயாரிப்பாளர் , இளையராஜாவை தனது அன்னக்கிளி படத்தில் அறிமுகபடுத்திய பஞ்சு அருனாச்சலத்தின் மகன், சுப்பு  பஞ்சு ஆவார் . இதில் நடித்தவர்கள் SPB சரண் ( பாடகர் SPB யின் மகன் ) , வெங்கட் பிரபு ( இயக்குனர் கங்கை   அமரனின் மகன் ),அரவிந்த் ஆகாஷ் ( பிரபல டேன்சர் சுசீலா  நீதியின்  மகன் ) ,சந்தோஷி   ( டிவி நடிகை பூரணத்தின் மகள் ) யுகேந்திரன் ( மலேசியா வாசுதேவனின்  மகன் ). இவர்கள்  அனைவருக்கும்   இந்த படம் முதல் படமும் கூட .இந்த திரைப்படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் .இசை யுவன் சங்கர்  ராஜா .அனைத்து பாடல்களையும்  எழுதியவர் அகத்தியன்  அவர்களே .இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்   2002 ஆம் ஆண்டு ஜூலை 19 இல் வெளியிடப்பட்டது .ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் படம் வெளி வராமலே போனது .இன்றும்   இந்த படத்தில் இடம் பெற்ற ' இரு  கண்கள்  சொல்லும்  காதல் செய்தி ' என்ற பாடல் கொடைக்கானல்   பண்பலையில் (KODAI FM) நேயர் விருப்பத்தில்  அதிகளவில் விரும்பிக்  கேட்கப்படுகிறது.



                  இன்னும் சில படங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது