இங்க மட்டுமில்ல, லண்டனிலும் பிரச்சனை தான் .......

" இந்த ஸ்கூலில் என் பயனைச் சேர்க்க வேண்டும் அதற்கு என்ன செய்யணும் ?"

         " ஒரு  லட்ச ரூபாய் டொனேசன்  தரணும் ".

  இது , சென்னை உயர் ரக ' ஸ்கூல்களில் சாதரணமாக நிகழும் நிகழ்வுகள் . வசதியுள்ளவர்கள் கொடுக்கிறார்கள் .குழந்தையை சேர்த்து விடுகிறார்கள் .கிட்டத்தட்ட லண்டன் 'ஹைகிளாஸ் ' பள்ளிக்கூடங்களிலும் '   இதே கதை தான் .ஆனால் அங்கே வேறு மாதிரியான டிமாண்டுகள் .வேறு மாதிரியான தந்திரங்கள் .லண்டனில் ,ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர வேண்டுமென்றால் அந்த ஏரியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது .
       இதற்காக ,பல பேர் தங்கள் உறவினர்களின் முகவரியை தங்கள் முகவரியாக தருகிறார்கள்.சகோதரன் ,சகோதரியோ ஏற்கனவே படித்துக் கொன்டிருந்தால் இடம்  தருவோம்  என்று  சொன்னால் ' ஒன்று விட்ட அண்ணன் அக்காக்களை குழந்தைகளின் உடன்பிறப்பாகச் சொல்கிறார்கள் .இன்னும் சிலர் விவாகரத்து செய்து கொண்டதாகவும் தந்தை ஓரிடம் தாய் ஓரிடம்  இருப்பதாகவும் பொய் சொல்கிறார்கள் .

   வசதியுள்ளவர்கள் செய்வதுதான் சூப்பர் திட்டம் ,' இந்த ஏரியாக்காரராக இருக்க வேண்டும் அவ்வளவு தானே  ?' என்று கூறி அந்த ஏரியாவில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள் . 
  ( பணம் பத்தாம் கிளாஸ் வரை பாயும் போலும் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது