நீண்ட இடைவேளைக்கு பின் இயக்குனர் கதிர் .........
இயக்குனர் கதிர் , அவ்வளவு எளிதில் மறக்க கூடிய இயக்குனரா அவர் ? கல்லூரி காதல் கதைகளுக்கு ஒரு புதிய பரினாமத்தை தந்தவர் . இதயம் , காதல் தேசம் , காதலர் தினம் போன்ற படங்களின் மூலம் இளைஞர்கள் மனத்தைக் கொள்ளை கொண்டவர் . நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு புதிய படத்தை இயக்கி தயாரிக்கிறார் .அந்தப் படத்தின் பெயர் '" கோடை விடுமுறை " .நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க நடிகர் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .இசை அவருடைய ஆஸ்தான இசையமைப்பாளர் A.R .ரஹ்மான் ,அதே போல் பாடல்களும் கவிஞர் வாலி எழுதுகிறார் . கதிர் கடைசியாக இயக்கிய படம் "காதல் வைரஸ்"(2002) .அதற்க்கு பின்னர் 2009 ஆம் ஆண்டில் அய்ங்கரன் இன்டர்நேசனல் தயாரிக்க , ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க ' மாணவர் தினம் " என்ற படத்தை இவர் இயக்குவதாக இருந்தது .ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தை எடுக்க முடியாமல் போனது . நிச்சயம் கதிர் படம் என்றால் பாடல்கள் அற்புதமாக இருக்கும் . இதயம் , உழவன் , காதல் தேசம் ,காதலர் தினம் , ஆகிய படங்களின் பாடல்களை மறக்க முடியுமா ? அதே போல் படத்தின் ஒளிப்பதிவுக்கு முக்கயத்துவம் கொடுத்து காட்சிகளையும் அழகாக எடுப்பவர் கதிர் . அயன் , கோ , போன்ற வெற்றி படங்களின் இயக்குனர் k.v .ஆனந்தை ஒளிபதிவாளராக தனது காதல் தேசம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுக படுத்தினார். மீண்டும் சிறப்பான படங்களை இயக்க நாம் கதிரை வாழ்த்துவோமாக
கருத்துகள்