கால்சியத்தின் மேல் கவனம் வைங்க!

மனித உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் உயிர்சத்துக்களைப் போல கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச்சத்து மிக முக்கியமாகும். நாம் உண்ணும் உணவுடன் தேவையான அளவு சுண்ணாம்புச்சத்து கிடைத்தால் மட்டுமே உடல் வளர்ச்சியடையும். பற்கள், எலும்பு வளர்ச்சிக்கு சுண்ணாம்புச் சத்து மிகவும் அவசியம்.

சக்தி தரும் சுண்ணாம்பு

நாம் உண்ணும் உணவை நல்ல முறையில் ஜீரணித்து ரத்தமாக மாற்ற சுண்ணாம்பு சத்து மிகவும் அவசியமானது. ரத்தத்தில் சுண்ணாம்புச் சத்து கலந்தால்தான் சதைகள் உற்பத்தியாகும். இரத்தம் சரியாக சக்தியுடன் இருந்தால் மட்டுமே இருதயம் அதன் வேலையைச் சரிவர செய்ய முடியும்.

வளரும் குழந்தைகளுக்கு
வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பமான பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவையானது. இதற்காக வெறும் சுண்ணாம்பை சாப்பிட்டால் வாய் வெந்து விடும். கீரைகள், காய்கள், பழங்களில் நன்றாக உட்கொண்டால் உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்து கிடைக்கும்.

பலவீனமாகும் எலும்புகள்
சுண்ணாம்பு சத்து குறைவினால் எலும்பு பலம் குறைந்துவிடும் இதனால் வயதானவர்களின் எலும்பு சீக்கிரம் உடைந்து விடும்.

பெண்களின் இடுப்பு எலும்பு பலம் குறைந்து வளைந்துவிடும். சிறுவர்களுக்கு அவர்களின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து கிடைக்காத காரணத்தினால் உடல் பலத்தை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து போகும்.

அஜீரணம் தொடர்பான நோய்கள் ஏற்படும். பசி மந்தப்படும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது