இரயில் பயணங்களில் .......

தொடர் வண்டி பயணம் , மற்ற பயணங்களை விட சுவாரசியமானது . அதிலும் முன்பதிவில்லா பொதுப் பிரிவில் பயணம் செய்வது பல அனுபவங்களை( சிரமங்களைகூட தரலாம்  ) தரும் .நான் பெரும்பாலும் பொது பிரிவில் பயணம் செய்பவன் என்பதால் , எனது அனுபவங்களை இந்த இடுகையில் பகிர்ந்து கொள்கிறேன் .. 
      
அதற்கு முன் ஒரு வரலாற்று  செய்தி . இரண்டாவது உலகப் போர் நடைபெற்று  கொண்டிருந்த சமயம் ,இந்திய ரயில்வே கம்பெனிகாரர்கள் ஒரு  அறிவிப்பை வெளியிட்டனர் .'பயணத்திற்கு முன் பயணம் செய்வது அவசியமா என்பதை யோசியுங்கள் .அப்படி பயணம் செய்யும் போது குறைந்த பொருள்களுடன் பயணம் செய்யுங்கள் ' என்று வலியுறுத்தினார்கள் அது மட்டுமல்ல , சில ரயில் பாதைகளை எடுத்தார்கள் , ஓடும் ரயில்களின் எண்ணிக்கையைக்  குறைத்தார்கள் , நினைத்த பொழுதெல்லாம் ரயில் கட்டணத்தை உயர்த்தினார்கள் . அவ்வளவு ஏன் , பதிவு செய்வது , மாநாடு , சிவராத்திரி போன்றவற்றிற்கும் கூட பயணசீட்டு தருவதை நிறுத்தினார்கள் . இவ்வளவு செய்தார்கள் ஆனால் பயண சீட்டு இல்லமால் பயணம் செய்பவர்களை தடுக்க முடியவில்லை( இன்றளவும்). ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கிற வரையில் அவர்களும் பயணம் செய்து கொண்டு தான் இருப்பார்கள் . 
   
    பெரும்பாலும் இரவு நேரங்களிலே பயணம் செய்யும் சூழ்நிலையே  எனக்கு அமையும்.அம்மாதிரியான சமயங்களில் இருக்கையில் அமர்பவர்கள் ,அதிர்ஷ்டசாலிகள்   கீழேயும் பொருட்கள் வைக்கும் பலகையிலும் ( மேலே) படுப்பவர்கள் தான் புத்திசாலிகள் . அதிர்ஷ்டம் எப்போதும் நிலைத்து நிற்பதில்லை 

       தம்பி கொஞ்சம் தள்ளி அமர முடியுமா ? நானும் அமர்ந்து கொள்கிறேன் என்பார்கள் . சரி நாமும் பெருந்தன்மையாக இடம்கொடுப்போம் , ஆனால் அதன் பின்பு வர போகும் வீபரிதங்களை நாம் உணர்வதில்லை . அமர்ந்தவரும் சும்மா இருப்பாரா? முதலில் நமது தோளில் சாய்வார் , பிறகு சிறிது நேரத்தில் அப்படி இப்படி என அசைந்து அரைகுறையாக படுத்து கொள்வார் , பிறகு நாம் அமர அவர் தயவை எதிரபார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருப்போம் .. 
  
                   இந்த மாதிரியான பயணத்தில் ஒரு நாள் , நான் பயணம் செய்த பெட்டியில் சில வட  மாநில  வாலிபர்கள் சிலர் வந்தனர் . பொழுது போகாமல் அவர்களை வேடிக்கை பார்த்து வந்ததில் ஒரு விஷயம் உணர முடிந்தது . அவர்கள் ஒரே ஊர்க்காரர்கள் ஆக இருந்தாலும் , சகோதரர்களாகவும் இருந்தாலும் அவர்களிடம் எந்தவித ஒற்றுமையும் இல்லை . எதாவது உணவு உண்டாலும் அல்லது அவர்களில் யார் ஒருவர்க்கு பிரச்சினை வந்தாலும் அவர்கள் ஒற்றுமையை  கடைப் பிடிப்பதில்லை . அந்த அளவுக்கு அவர்கள் சுயநலவாதியாக மாற அவர்கள் ஆட்சியாளர்கள் தான் காரணமாக இருக்க முடியும் .


                         இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகள் அடுத்த பதிவில் பார்ப்போம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது