'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்'
தமிழ்சினிமாவின் 'அழகிய தமிழ் மகன்' யாரென்றால், சட்டென்று கவுதம் மேனனை நோக்கிதான் கை நீளும். அவரே மேனன்? இதென்ன கேணத்தனமான ஒரு விளக்கம் என்கிறீர்கள், அப்படிதானே?எப்பொழுதும் அவரது படங்களில் தமிழ்தான் ஆட்சி மொழி..
தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சட்டத்திற்கெல்லாம் முன்னாலேயே தனது முதல் படத்திற்கு 'மின்னலே' என்று பெயர் வைத்தவர் அவர். அதில் தொடங்கி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்'
மேற்படி படங்கள் ஓடியதும் ஓடாமல் போனதும் வேறு விஷயம். ஆனால் அவரது தமிழ் தலைப்புகளுக்கு ஒரு கவுரமான வணக்கத்தை நாம் தந்தேயாக வேண்டும். இப்போதும் அவர் ஜெய்யை நடிக்க வைத்து தயாரிக்கவிருக்கும் ஒரு படத்திற்கு அழகான தமிழில்தான் பெயர் சூட்டியிருக்கிறார். 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்பதுதான் இந்த புதிய படத்தின் பெயர்.
|
நன்றி -செய்தி.காம்
|
கருத்துகள்