கால்ல விழுந்திருப்பேன் ! : பாலு மகேந்திரா

  ன்னை பல தருணங்களில் சிந்திக்கவும் நெகிழ வைத்தவர் பாலு மகேந்திரா , இன்றளவும் அலை பேசி பயன்படுத்தாத எளிமையான மனிதர் .நானறிந்த  வரையில் மூன்றாம் பிறை  படத்தின் இறுதிகாட்சி போன்று எந்த  திரைப்படத்திலும் கண்டதில்லை . மற்ற  இயக்குனர்களின் சிறந்த திரைப்படத்தை பாராட்டவும்  தவற  மாட்டார் . அந்த வகையில் சமீபத்தில் திரைக்கு வந்த வழக்கு எண்  பற்றி அவர் பாராட்டிய விதம் நெகிழக் கூடியது .. 

      சமீபத்தில் இயக்குநர்கள் சங்கம் சார்பில் 'மாற்று சினிமாவிற்கான கலந்துரையாடல்' என்று வழக்கு எண் 18/9 படம் பற்றி பேசப்பட்டது.
விழாவில் தலைமை உரை ஏற்று இயக்குனர் பாலு மகேந்திரா " சமீபத்தில் நான் பார்த்த படங்களில் 'வழக்கு எண்' படம் என்னை ரொம்ப பாதித்தது விட்டது. படம் பாத்து விட்டு பாலாஜிக்கு போன் செய்து பேசினேன்.'நல்ல வேளை.. நீங்கள் இப்போது இங்கு இல்லை, இருந்திருந்தால் உங்கள் காலை தொட்டு வணங்கி இருப்பேன்' என்றேன். அவ்வளவு நேர்த்தியான படம் இது. இப்படி ஒரு படத்தை பார்க்க தான் இன்னும் இந்த உயிர் இருந்திருக்கும் போல, படம் எல்லா வகையிலும் என்னை பாதித்தது., இயக்கம், நட்சத்திர தேர்வு என்று அருமையாக ஒரு சிற்பம் போல செதுக்கி இருக்கார் பாலாஜி. தமிழில் இப்படி ஒரு படம் வந்ததை கர்வமாக நினைக்கிறேன். எல்லோரும் ஈரானிய படங்களை பற்றி பெருமையாக ‌பேசுகிறார்கள். ஆனால் அந்த மொழி படங்களிலும் பாட்டே இல்லாத படங்கள் நிறைய வந்திருக்கு. அதுபோன்ற பாட்டே இல்லாத படங்களை எடுக்க அந்த தெம்பும், தைரியமும் 'வீடு', 'சந்தியா ராகம்' போன்ற படங்கள் பண்ணும் போது வந்தது.முதலில் சினிமாவை கற்றுக் கொள்ளுங்கள். 'வழக்கு எண்' படத்தை டிஜிட்டல் ரூட் காமிராவில் எடுத்திருக்கிறார்கள். அடுத்து இனி டிஜிட்டல் தான் என்கிறார்கள். நாளைய சினிமா மாற்றம் இது. இப்போதும் கூட நான் சூட்டிங் போய்விட்டு தான் வரேன். முதல் ஷாட் காலை 6.30 மணிக்கு வைத்தேன். இப்ப எனக்கு ரொம்ப கர்வமாய் இருக்கு. இந்த வயசுலேயும் எனக்கு வேலை ஈஸியா முடிகிறது.எனக்கு கும்பல் வேண்டாம், கோடி வேண்டாம், கொஞ்சம் பேரை வைத்து படம் பண்ணி வருகிறேன். இங்கு தி‌றமை இருந்தால் போதும், நல்ல சினிமா பண்ணலாம் " என்று கூறினார்.

                                                                                                             நன்றி - சினிமா விகடன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...

இனிய பாடகர் சாகுல் ஹமீது