நியூட்டன் கண்ட புதுமை

இது  பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி அனைவருக்குமானது ..




நியூட்டன் 1927ல் இறந்த பொழுது அவரது நண்பரும் ஆங்கில  கவியுமான போப் என்பவர் ஒரு கவிதை தீட்டினர் . நியூட்டன்  சமாதியில்  கல்லறையில் இக்கவிதை பொறிக்கப்பட்டது
                       " இயற்கையும் இயற்கை விதிகளும்
                           மறைந்திருந்தன இருளில்,
                           கடவுள் கூறினார் , வரட்டும் நியூட்டன் என்று ;
                           எல்லாம் ஒளிமயமகியது .
                ( Nature and Nature's Laws lay hid in night 
                 God said,let Newton be ! And all was light)    
ஆம் உலகிற்கே ஒளியுட்டியவராகப் போட்ட்ரப்பட்டவர் சார் இசாக் நியூட்டன் .
19 ஆம் நூற்றாண்டில் எக்ஸ்ரே  கண்டுபிடித்த ரண்ட்ஜோன் முதற்கொண்டு பல பிரபல வின்ய்யாநிகளும் " ஏலேக்ட்ரோன் " என்ற துகள் கண்டு பிடிக்கப்பட்டபோது ஏற்க மறுத்து விட்டனர் . அணுவை விட சிரியதுகளா  என  கடிந்து மறுத்தனர் . உள்ளதோ ஒரு பிரபஞ்சம் .அதனை விளக்க ஒரே ஒரு இயற்பியல் போதும் அந்த இயற்பியலைதான் நியூட்டன் செய்து விட்டாரே. நியூட்டநின் இயற்பியலில் அணுவை விட சிறிய பொருளுக்கு இடமில்லை என்று கருதிய ராண்ட்ஜன் மறுப்பு குரியத்ருகு கரணம்.
ஆம்,  ' பில்லாசபிகா  நேச்சுரலிஸ்   ப்ரின்சிபிய மதமாதிகா "  என்ற நூல் நியூட்டன் ஆல் எழுதப்பட்டவுடன் பிறந்த நியூட்டநின் இயற்பியல் - பாரம்பரிய  இயற்பியல் -19 ஆம் நூற்றாண்டு வரை ,250 ஆண்டுகள் மகுடம் சுட்டி மணி முடி தரித்த வேந்தர் போல் நிறைவாக இருந்தது

 ஒரு நாள் மாலை நியூட்டன் ஓய்வாக ஆப்பிள் மரத்தடியில் ஒதுங்கியிருக்க , தற்செயலாக அவரது தலையில் ஆப்பிள் ஒன்று விழுந்தது .அவரது கவனம் தேசி திரும்பியது .தலையில் விழுவதற்கு காரணம் பூவிஈர்ப்பு சக்தி .அது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன்க்கு முன்ப்ஹி பலர்   பூவிஈர்ப்பு சக்தி குறித்து கருது உருவாக்கியிருந்தனர் .ஆனால் வானில் வட்டாமிடும் நிலா பூமியை வளம் வரக் காரணமென்ன ? எந்தச்  சக்தி நிலவைச்  சுற்றி பூமியை சுற்றி வர வைக்கிறது ? இதுவே நியூட்டன்நின் அச்சமயத்தில் மலர்ந்த கேள்வி .
கேள்வி கேட்பது என்பது விடை காண முதல் படி. அதுவும் சரியான கேள்வி கேட்பது என்பதுதான் அறிவியலின் அச்சாரம்.
ஒரு கயிற்றின் முனையில் பந்தை பினையுங்கள் .கயிற்றை முடுக்கினால் கயிற்ரோடு பந்தும் சுழலும் , வட்டமாக சுழன்று பாயும் .
அதே பந்தை சமதளமான மேசையில் வைக்கவும் கையினால் சற்றே விசை கொடுத்தால், பந்து விசை பெற்று  உருளும் .கையின் விசை அகன்றாலும் பந்து உருண்டு கொண்டேதான்  இருக்கும்.உராய்வு தடுத்து உருள்வதை மட்டப்படுத்தும் வரை பந்து உருண்டு கொண்டேதான் இருக்கும் .அது மட்டுமல்ல , விசை பெறுவதற்கு முன்பு பந்தும் மேசையும் இயக்கமற்று ஒய்வு நிலையில் இருந்தது அல்லவா? விசை பெறாமல் பந்து நகராது; இயங்காது . அதே இடத்தில தான் இருக்கும் .விசை பெற்றால் நேர்கோட்டில் பாயும்.
 இது போன்ற இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கி பிறந்தது நியூட்டன் முதல் விதி .
           கயிற்றில் பிணைத்த  பந்து பந்து மட்டும் நேர்கோட்டில் செல்லாமல் வட்டமான பாதையில் பாய்வது ஏன்? அதுவும் இரு வேறு விசைகளின் கூட்டு விளைவு தான் .கயிறு முடுக்கும் விசையும் ,கயிறு பிணைப்பு ஏற்படுத்தும் விசை முதலியவற்றின் கூட்டு விளைவுதான் வட்ட பாதை
            மேசையில் உள்ள பந்திற்கு அதிக விசை கொடுத்தால் அதிக வேகத்துடன் பாயும் .விசை அதிகரிக்க அதிகரிக்க பந்தின் பாயும் வேகம் அதிகரிக்கும்  .இதுவே நியூட்டன் இரண்டாம் விதி பிறக்க காரணம்.
         காற்று அடைத்த பல்லூன் ஒரு திசையில் பாய அதன் எதிர் திசையில் அடைக்கப்பட்ட காற்று பாயும். விளைவு பலூனின் இயக்கம்.பூமியின் eeர்ப்பு விசையால் நாம் பூமியின் மீது விசை செலுத்தும் அதே வேலையில் பூமி நம் மீது எதிர் திசையில் விசை செலுத்தும் . விளைவு , பூமியின் தரைப்பரப்பில் நாம் நிற்க , நடக்க , இயங்க, முடிகிறது . இது நியூட்டன்நின் மூன்றாம் விதி
                  தராசு எடை அளப்பதும்  இதன் விளைவுதான்.தராசின் மீது நாம் ஒரு பொருளை வைத்தால் பொருளின் எடை தராசு முள்ளில் தெரியும் . அதே தராசையும் எடையையும் உயரத்திலிருந்து கிழே விழ  செய்தால் தராசு மேல் உள்ள எடையும் ,தரசும் ஒன்றாகக் கிழநோக்கி  பாயும். அச்சமயத்தில் தராசில் எடை முள் நகராது .பூச்சியம்  தான் காட்டும்.
         பள்ளிkகுட இயற்பியல் பால படமாக நாம் இப்போது படிக்கும் இன் நியூட்டன் நின் விதிகள் அன்று ,நியூட்டன் நின் காலத்தில் ,பெரும் புதுமையாக இருந்தது . அதுவரை விளங்காத பல இயற்கை நிகழ்வுகளை விளங்க வைத்தது .
                    நிலவு ஏன் பூமியை சுற்றி வருகிறது ? ஆப்பிளின் மீது பூமி ஏற்படுத்தும் புவி ஈர்ப்பு விசை போன்று நிலவின் மீதும் பூமியின் ஈர்ப்பு விசை வினை புரிகிறது .அதன் விளைவாக நிலவு பூமியை நோக்கி பாய்கிறது .ஆப்பிள்ஐ  போலத்தான் .
  போவி நிலவின் மீது செலுத்தும் ஈர்ப்பு சக்தியும் , நிலவின் நேர்கோட்டு இயக்கமும் பிணைந்து உருவான பாதையே வட்ட சுழற்சி பாதை என நியூட்டன் கூறினார் .




ஆனால் அதற்குள் , பூமி தனது சூரியனை சுற்றி வளம் வரும் ஓட்டத்தினால் இடம் அகன்று விடுகிறது .இவ்வாறு நிலவு விழ , பூமி இடம் நகர என தொடர் நிகழ்வுகளின் விளைவு - நிலவு பூமியை சுற்றி வருவது  போன்ற தோற்றம்  .இதுதான் நியூட்டன் தந்த விளக்கம் .
  கயிற்றில் பிணைந்த பந்து வலம் வருகிறது ,அல்லவா? அது போலத்தான் நிலவும் சுழல்கிறது .ஆனால் கயிறு இல்லை புவி ஈர்ப்பு விசை உண்டு .அவ்வளவு தான் வித்தியாசம் .இதுவே நியூட்டன் கண்ட விடை .பந்தின் இயக்கமும் ,ஆப்பிளின் இயக்கமும் நிலவின் இயக்கமும் ஒன்று தான் எனக் கண்டு தெளிந்தது தான் நியூட்டன்நின் மகத்துவம் .
     அதுவரை புதிர் எனக் கருதியிருந்த பல இயற்கை நிகழ்வுகளை நியூட்டன் நின் விதிகள் வெகு எளிதில் நேர்த்தியாக விளக்கின . கோள்கள் ஏன் சூரியனை வலம் வருகின்றன? பொருட்கள் திரட்சி அடைவதும் நியூட்டன் நின் விதியின் விளையாட்டு என பிரபஞ்ச இயற்பியல் நிகழ்வுகளை விளக்க நியூட்டன் நின் விதிகள் போதுமானதாக இருந்தது .
         அது மட்டுமல்ல , நியூட்டன்நின் விதி கொண்டு பல அனுமன்களை மேற் கொள்ள முடிந்தது .அவ்வனுமனங்கள் மெய்பட்டது. எடுது௮ கட்டாக யுரேனஸ் கொள் கண்டு பிடிக்க பட்ட போது , நியூட்டன்நின் விதி கொண்டு அதன் பாதை வகுக்க பட்டது .ஆனால் , வகுக்கப்பட்ட பாதைக்கும் அதன் மெய்யான பாதைக்கும்  இடையே வேறுபாடு புலப்பட்டது . இதனை கொண்டு யுரேனஸ்க்கு அப்பால் ஒரு கோள் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் மதிபிட்டனர் .
                 நியூட்டன் விதி கொண்டு பிரபஞ்ச இயக்கம் அனைத்தையும் விளக்கிவிடலாம் என அன்று இயற்பியலாளர்கள்  கருதியிருந்தனர் .அக்கோல் செலுத்தும் ஈர்ப்பு விசையால் யுரேனசின் பாதை தடுமாறுகிறது என அறிவியலாளர் அனுமானித்தனர்
     நியூட்டன் நின் கொள்கை மேலும் மெய்படும் வகையில் நெப்ட்யூன் கோள் கண்டு பிடிக்க பட்டது . இது நியூட்டன் நின் விதி குறித்த நம்பிக்கைக்கு வலுசேர்த்தது .
         " நியூட்டன் நின் உலகம்" என புகழப்பட்டாலும் இவை அனைத்தும் தன்னந்தனியே நியூட்டன் ஒருவர் மட்டுமே கட்டியேளுப்பவில்லை. நியூட்டன் க்கு முன்பு galileo ,டாவின்சி, சதமென் ஸ்டீபன் , பாஸ்கல் ஆகியோரின் கோடை கொண்டு லப்லாசே, லச்ரஞ்சே ஆகியோர் செம்மை படுத்தி நேர்த்தி ஆக்கியதே "நியூட்டன் இயற்பியல் கொள்கை " அல்லது பாரம்பரிய இயற்பியல் 

  

 
                

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது