இதுவா சிறந்த கல்வி ...?

ன்றைய கல்வி ஏந்த நிலையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான +௨ தேர்வு முடிவுகள் .. முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் , இல்லை அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியை சேர்ந்தவர்கள் .. இதற்காக அங்கு உள்ள பள்ளிகள் மட்டுமே சிறந்த பள்ளிகள் என்று ஆக போவதில்லை ..இதற்காக அந்த மாவட்டம் பெருமை பட்டுக் கொள்ளலாமே தவிர , ஒரு சாமானியனுக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சும் .. அதவாது நாமக்கல் , திருசெங்கோடு பகுதிகளை பொறுத்துவரை பள்ளி கல்லூரிகள் மற்ற மாவட்டங்களை  விட அதிக எண்ணிக்கையில் காணப்படும் .. இதற்காக மட்டுமே கல்வி மாவட்டத்தில் சிறந்த மாவட்டம் என்று கருத முடியாது .. அங்கு உள்ள பள்ளிகளின் நிலையே வேறு .. 

      அதாவது அங்கு உள்ள பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு , என்பது திரும்ப திரும்ப பயிற்சியளித்தல் என்ற நிலையில் இருக்கும் ..  தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து, கேள்விக்கான விடை எழுதுதலை ஓர் அனிச்சைச் செயலாக மாற்றிவிடும் கல்விமுறையின் வெற்றியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.  இந்த மாதிரியான கற்றல் கற்பித்தல்  முறை தான் அங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . எப்படி பழனியில் பஞ்சாமிர்த  கடைகளோ , அதே போல் இங்கயும் மதிப்பெண்களை வழங்கும்  வணிக வளாகங்கள் ... 

ஆனால் பெற்றோரின் மன நிலை மேலும் மெச்சிக் கொள்ளும் வகையில் உள்ளது . இந்தப் பள்ளிகளில் படித்தால் நிச்சயம் 90% மதிப்பெண் கிடைக்கும், கட்-ஆப் அதிகமாகும், நிச்சயமாக நல்ல பொறியியல் கல்லூரியில் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் பலரும், தமிழகத்தின் பல திசைகளிலிருந்தும் நாமக்கல் நோக்கி வருகின்றார்கள். இனி மேலதிகமாகப் படையெடுப்பார்கள். ஒரு சிறந்த மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் தனது குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் செலவிட்டாக வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர் என்றால், ரூ.30 லட்சம் செலவாகும். இது போன்ற பள்ளிக்கூடங்களில் சில லட்சம் ரூபாய் செலவில் தனது குழந்தைக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்துக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், பல லட்சம் மிச்சம்தானே? சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வாழ்க்கையின் உத்திகளில் பெற்றோர் சிக்கித் தவிக்கும் காலத்தில், இதைச் சரி என்று சொல்லவும் முடியவில்லை, தவறு என்று மறுக்கவும் முடியவில்லை.

இதெல்லாம் இப்படி நடந்துக் கொண்டிருக்க அரசு பள்ளி மாணவர்களின் நிலையோ  மிகவும் மோசமாக உள்ளது .ஒரு முறை பனிரெண்டாம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்திய அனுபவம் உண்டு .. விடைத்தாள் மதிப்பீடு செய்வதில் ஆங்கில மொழியில் எழுதிய விடைத்தாள்களை ( தனியார் பள்ளி மாணவர்கள் ) மதிப்பீடு செய்வது தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது மிகவும் எளிது... பெரும்பாலான விடைத்தாள்களில் கூடுதல் தாள்களே இருக்காது ... இதிலிருந்தே உனாரலாம் நமது அரசு பள்ளிகளின் செயல்பாடு எப்படி என்பதை  .. இருந்தாலும்  சொற்ப சில அரசு பள்ளிகள் திறம்பட செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன .. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சவால்விட்டுக் களத்தில் இறங்குவார்கள் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நிற்கிறோம். அதிக சம்பளம், அதிக சலுகை கேட்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையில் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை சாமானியக் குடிமகனுக்கு எப்படி வழங்க முடியும் .. 

 இப்படி இருக்க அரசு எவ்வளவு  செலவு செய்து திட்டங்களை கொண்டு வந்தாலும் அது வீணே ... 


( இதில் ஒரு சில கருத்துகள் தினமணி நாளிதழில் இருந்து எடுத்தாளபட்டுள்ளது)  
      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது