இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீண்ட இடைவேளைக்கு பின் இயக்குனர் கதிர் .........

படம்
இயக்குனர் கதிர் , அவ்வளவு எளிதில் மறக்க கூடிய இயக்குனரா  அவர் ? கல்லூரி  காதல் கதைகளுக்கு ஒரு புதிய பரினாமத்தை தந்தவர் . இதயம் , காதல் தேசம் , காதலர் தினம்  போன்ற படங்களின் மூலம் இளைஞர்கள் மனத்தைக் கொள்ளை கொண்டவர் . நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு புதிய படத்தை இயக்கி தயாரிக்கிறார் .அந்தப் படத்தின் பெயர்  '" கோடை விடுமுறை " .நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க நடிகர் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .இசை அவருடைய ஆஸ்தான இசையமைப்பாளர் A.R .ரஹ்மான் ,அதே போல் பாடல்களும் கவிஞர் வாலி எழுதுகிறார் . கதிர் கடைசியாக இயக்கிய படம் "காதல் வைரஸ்"(2002) .அதற்க்கு பின்னர் 2009 ஆம் ஆண்டில் அய்ங்கரன் இன்டர்நேசனல் தயாரிக்க , ஸ்ரீகாந்த் நாயகனாக  நடிக்க ' மாணவர் தினம் " என்ற படத்தை இவர் இயக்குவதாக இருந்தது .ஆனால்  ஒரு சில காரணங்களால் படத்தை எடுக்க   முடியாமல் போனது . நிச்சயம் கதிர் படம் என்றால் பாடல்கள் அற்புதமாக இருக்கும் . இதயம் , உழவன் , காதல் தேசம் ,காதலர் தினம் , ஆகிய  படங்களின் பாடல்களை மறக்க முடியுமா  ? அதே போல் படத்தின் ஒளிப்பதிவுக்கு  முக்கயத்துவம் கொ...

காதலர் தினம் சங்க கால தமிழர்கள் கொண்டாடிய திருவிழா ......

 இன்று உள்ள இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் 'பிப்ரவரி 14 ' பற்றி தெரியாமல் போக வாய்ப்பே   இல்லை . ஆம் ,அன்றைய தினம் உலகம் முழுதும் கொண்டாடப் படும் ' வாலண்டைனின் தினம்'   எனப்படும் காதலர் தினம் தான் . இந்த தினம் கொண்டாடப் படுவதற்கு வேறு மாதிரியான வரலாற்று காரணங்கள் கூறப்பட்டாலும் அது தமிழர்கள் கொண்டாடிய சங்க கால திருவிழா என்பது தமிழர்களான நமக்கு தெரியுமா ? ஆம் காதலர் தினம் சோழர்கள் காலத்திலயே கொண்டாடப் பட்டு உள்ளது .அது பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை :                                         பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலக...

இன்றைய நகைச்சுவை

ஆழ்கடலின் ரகசியங்களை ஆராய்வதற்காகக் கப்பலில் சென்ற பேராசிரியர் ஜான்சன் , கடலுக்குள் இறங்கி வெகு ஆழத்துக்குச்   சென்றார் .ரொம்ப நேரம் கழித்துக் கப்பலுக்குச் செய்தி  அனுப்பினார் .      " பல அரிய பொருள்களை சேகரித்தாயிற்று.இதோ நான் மேலே வந்துக் கொண்டிருக்கிறேன் ."       கப்பலிலிருந்து  அவருக்குப் பதில் போயிற்று ; " பிரயோசனமில்லை . கப்பலில் ஓட்டை ஏற்பட்டு விட்டது .நாங்கள் கீழே  வந்துகொண்டிருக்கிறோம் ".

இன்றைய திருக்குறள்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. கலைஞர் உரை: மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும். மு.வ உரை: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். சாலமன் பாப்பையா உரை: மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு. Translation: Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of good. Explanation: Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

கலீல் கிப்ரான்

படம்
 இந்தியாவில் உன்னதமான கவி புல மிக்க கவிஞர்கள்  எத்தனையோ பேர் தங்களது  எழுத்துகளின் மூலம் இந்திய மண்ணுக்கு பெருமையையும் , மரியாதையையும் சேர்த்து வந்தனர் . அதே போல் அயல் நாட்டு கவிஞர்களும் தங்களது படைப்புகளின் மூலம் அநேக  மக்களின் மக்களை கொள்ளைக் கொண்டதோடு நில்லாமல் வாழ்வியல் நெறிகளையும் தந்து விட்டு சென்றனர் .அவர்களுள்  ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் போன்றோர்களின் படைப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை . இவர்களுள் என்னை  கவர்ந்தவர் கலில் கிப்ரான் .அவரை  பற்றி என்  அறிவுக்கு எட்டியவை சில உங்களுக்காக :   கலில் கிப்ரான் ( Khalil Gibran )   கலில் கிப்ரான் ( Khalil Gibran ) லெபனான் நாட்டைச் சார்ந்த கலைஞர், கவிஞர், எழுத்தாளர்.அவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகிக்கின்றன. கலில் கிப்ரான் எழுதிய புத்தகங்கள் ஓவ்வொரு மனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பபவை. தத்துவஞானியும்  கவிஞருமான கலீல் கிப்ரானின் பொன்மொழிகள் தமிழ் உட்படப் பல மொழிகளில் வெளி வந்து உள்ளன .லெபனானில் பிறந்து...

இன்றைய நகைச்சுவை

  புலி வேட்டைக்கு ரொம்ப ஜம்பமாக கிளம்பினார் ஜான் துரை .     கூட வந்த உதவியாளர் , " உங்களால் புலியைச் சுட முடியாது " என்றார் .     "  ஏன் ?"      " துப்பாக்கியில் தோட்டா இல்லை , துரை "     " அது புலிக்கு தெரியாதே " என்று பதிலளித்தார் துரை .

இன்றைய திருக்குறள்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. கலைஞர் உரை: ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார். மு.வ உரை: ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ. சாலமன் பாப்பையா உரை: ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?. Translation: 'Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soul. Explanation: Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.

IT துறையில் பணிபுரிபவரா நீங்கள் ? உங்களுக்கோர் எச்சரிக்கை .....

படம்
இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம். கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு,நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக க...

இங்க மட்டுமில்ல, லண்டனிலும் பிரச்சனை தான் .......

" இந்த ஸ்கூலில் என் பயனைச் சேர்க்க வேண்டும் அதற்கு என்ன செய்யணும் ?"          " ஒரு  லட்ச ரூபாய் டொனேசன்  தரணும் ".   இது , சென்னை உயர் ரக ' ஸ்கூல்களில் சாதரணமாக நிகழும் நிகழ்வுகள் . வசதியுள்ளவர்கள் கொடுக்கிறார்கள் .குழந்தையை சேர்த்து விடுகிறார்கள் .கிட்டத்தட்ட லண்டன் 'ஹைகிளாஸ் ' பள்ளிக்கூடங்களிலும் '   இதே கதை தான் .ஆனால் அங்கே வேறு மாதிரியான டிமாண்டுகள் .வேறு மாதிரியான தந்திரங்கள் .லண்டனில் ,ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர வேண்டுமென்றால் அந்த ஏரியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது .        இதற்காக ,பல பேர் தங்கள் உறவினர்களின் முகவரியை தங்கள் முகவரியாக தருகிறார்கள்.சகோதரன் ,சகோதரியோ ஏற்கனவே படித்துக் கொன்டிருந்தால் இடம்  தருவோம்  என்று  சொன்னால் ' ஒன்று விட்ட அண்ணன் அக்காக்களை குழந்தைகளின் உடன்பிறப்பாகச் சொல்கிறார்கள் .இன்னும் சிலர் விவாகரத்து செய்து கொண்டதாகவும் தந்தை ஓரிடம் தாய் ஓரிடம்  இருப்பதாகவும் பொய் சொல்கிறார்கள் .    வசதியுள்ளவர்கள் ச...

வெளி வராத தமிழ் படங்கள் - 2

படம்
     இந்த பதிவு வெளி வராமலே போன தமிழ் படங்களை பற்றி நினைவு கூறலின் தொடர்ச்சி ஆகும் .   உள்ளம்              இந்தப் படம் பிரபல இயக்குனர் கதிரின் இணை இயக்குனர் அருண் மூர்த்தி அவர்களின் முதல் படமாகும் . இத்திரைப் படத்தில் நாயகனாக மிதுன் நடிக்க , நாயகிகாளாக தீபு மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்தனர் .பிரியாமணியின் முதல் படமான " கண்களால் கைது செய்" படத்தில் நடிக்கும் போதே இந்த படத்திலும் நடித்தார் ..அவர்களுடன் ரகுவரன் ,அம்பிகா , அனுஹாசன் ,கருணாஸ் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் நடித்தனர் .2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது .இப்படத்தில் மொத்தம் உள்ள ஐந்து பாடல்களும் ஜனவரி 10 ,2004  இல் வெளியிடப்பட்டது .யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் . இந்த படத்தின் கதை  முக்கோண காதல் கதை என்றும் , இளைங்கர்களுக்கான படம் என்றும் பேசப்பட்டது . இந்தப் படமும் இன்று வரை ரீலிஸ் ஆகவில்லை  . படக்குழுவினர் விபரம்     கதை ,திரைக்கதை , இயக்கம் , வசனம் : அருன்மூர்த்தி...

இன்றைய நகைச்சுவை

கதவை தட்டியதும் அந்த  அம்மாள் திறந்தார்.    வந்தவர் , " ஸாரி மேடம் ! உங்கள் பூனை மீது , என் கார் ஏறிவிட்டது . நீங்கள் எப்பிடிச் சொல்கிறீர்களோ அப்படி ஈடு செய்கிறேன் " என்றார் .   " நல்லது .தினமும் இங்கே வந்து எலி பிடியுங்கள் " என்றாள் அந்த அம்மா  

இன்றைய திருக்குறள்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது. கலைஞர் உரை: பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். மு.வ உரை: கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள். சாலமன் பாப்பையா உரை: மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது. Translation: Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdain. Explanation: Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

இலவச திட்டங்களின் தந்தை

 இலவச வேட்டி , இலவச சேலை , இலவச சத்துணவு முதலான திட்டங்களின் தந்தை , டச்சு நாட்டின் தலை நகரமான ஆம்ஸ்டர்டாமில் பிறந்த ( பெயரை சிரமப்பட்டு படிக்கவும் ) ல்யூட்  ஷிம்மெல் பென்னிக் .       நாற்பது வருடங்களுக்கு முன் இவர் ஆரம்பித்தது இலவச சைக்கிள் திட்டம் , சைக்கிள் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறிய இவர் , தன திட்டத்தை புதுமையான முறையில் நடைமுறைப்படுத்தினார் .அதாவது , இவரது வெள்ளை நிற சைக்கிள்கள் , விளக்குக் கம்பங்களின் கீழே நிறுத்தப்பட்டிருக்கும் .தேவையுள்ளவர்கள் அதை எடுத்துச் சென்று ,போகும் இடத்தில் அருகில் உள்ள விளக்குக் கம்பத்தின் கிழே விட்டு விட வேண்டும் .அங்கே தேவையுள்ளவர் அதை எடுத்துக் கொள்ளலாம் .         சில நாட்களில் , எல்லா நல்ல திட்டங்களையும்  போல இந்தத் திட்டமும் கெட்டுவிட்டது.சைக்கிளைப் பழுதாக்கினார்கள்  சிலர். திருடிக் கொண்டு போனார்கள் சிலர் .72 வயதான சிம்மெல் பென்னிக் தன் திட்டத்தைக் கைவிடவில்லை .கம்ப்யுட்டர் பொருத்தி ,சைக்கிள்கள் திருட்டுப் போகாமல் பாதுகாப்பதுடன் ,ஒரு சிறிய...

இயக்குனர் மகேந்திரன்

படம்
 1980 களில் வந்த திரைப்படங்களை ரசித்த சினமா பிரியர்களுக்கு , நிச்சயம் இயக்குனர் மகேந்திரன் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் . நீண்ட நாளாகவே எனக்கு ஒரு ஏக்கம் உண்டு .அது என்னவென்றால் இளையராஜாஅவர்கள்  இசை கொடி கட்டி பறந்த அந்த நாட்களில் நாம் பிறக்கலையே என்று . அது போலவே தான் மகேந்திரன் அவர்களின் படங்கள் ரீலிஸ் ஆனா நாட்களில் நாமில்லையே என்ற ஏக்கமும் . யோசித்து பாருங்கள் , அந்த காலகட்டத்தில் இளையராஜா ,பாரதி ராஜா , மகேந்திரன் , பாலு மகேந்திரா, பாலசந்தர் போன்ற தமிழ் சினிமாவை ஆண்ட அரசர்கள் இல்லாமல் இருந்தால் என்னவாயிருக்கும் . தமிழ் திரைப்பட  வரலாற்றில்  நிச்சயம் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்திருக்கும் . ஆகவே இவர்களின் பங்கு தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது .இதில் இயக்குனர்  மகேந்திரன் பற்றி எழுத வேண்டும்  என்பது என் நீண்ட நாள் ஆசை .ஏனென்றால் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்திலயே , சினிமாத் துறையை வேண்டாம் என்று உதறி தள்ளியவர் ,பிறகு எம்.ஜி ,ஆர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் சினிமா இயக்க ஆரம்பித்தார் . எம்.ஜி ,ஆர் அவர்களுக்கு ...

வெளி வராத தமிழ் படங்கள்

படம்
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளி வந்து வெற்றியையோ, தோல்வியையோ  தழுவுகின்றன . ஆனால் ஒரு சில  படங்கள் வெளி வராமலே பொட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன . அந்த படங்களை நாமளாவது நினைவு கூறுவமே , என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு . 1. கோடீஸ்வரன்  எபி குஞ்சுமோன்  மற்றும் கரிஷ்மா கபூர்    இந்தப் படம் பிரபல தயாரிப்பாளர் kt குஞ்சுமோனின் மகன் எபி குஞ்சுமோன் ஹீரோவாக நடித்து, அவராலே(kt குஞ்சுமோன் ) தயாரிக்கப்பட்டது . kt  குஞ்சுமோன் ஜென்டில் மேன், காதல் தேசம் போன்ற வெற்றி படங்களின் தயாரிப்பாளார் . காதல் தேச வெற்றிக்கு பிறகு , நடிகர்  அப்பாஸை வைத்து இந்தப் படம் தயாரிப்பதாக  இருந்தது .ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக , எபி குஞ்சுமோனை( 18 வயதில்  ) அறிமுகபடுத்தப் பட்டு , நடிக்க வைக்கப் பட்டது . அவருக்கு  ஜோடியாக கரிஷ்மா கபூர் , சிம்ரன் ஆகியோர் நடித்தனர் .அது மட்டுமின்றி ஜெயபிரதா, அம்பிகா , லதா, சுகுமாரி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்தனர் . இந்த படத்திற்கு கதையை kt குஞ்சுமோனே எழுதினார் . இத்திரைப்படம் 1997 இல் தொடங்கபடுவதாக இருந்தது , ஆனால்...

இன்றைய நகைச்சுவை

கம்பெனியின் இரண்டு ஊழியர்கள்  கேண்டீனில் சந்தித்துக் கொண்டார்கள் .ஒருவர் கேட்டார் : " என்றையிலிருந்து நீங்கள் வேலை செய்கிறீர்கள் ? "        '' ஒரு நாள் முதலாளி என்னைக் கூப்பிடு , 'வேலை செய்யா விட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் ' என்றார் , அன்றையலிருந்து ' என்று பதில் வந்தது

இன்றைய திருக்குறள்

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். கலைஞர் உரை: உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. மு.வ உரை: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை. Translation: Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand. Explanation: There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

" காஸ்ட்ரோவின் ஆசை "

படம்
  நாற்பது ஆண்டுகளாக கியபாவின் கம்யுனிஸ்ட்  சர்வாதிகாரியாக  கொடிகட்டிப் பறக்கிறார் காஸ்ட்ரோ .ஆனால் திருப்தியில்லை .முன்னொரு  வருடங்களுக்குப் பிறகும் தன் பெயர் பிரகாசிக்க என்ன செய்ய  வேண்டும் என்பதைப்  பற்றி யோசித்து திட்டம் தீட்டி அரசாங்க அறிக்கையாக வெளியிட்டுள்ளார் . காஸ்ட்ரோ                            அதன் படி , 'ஹவனா' என்ற தலை நகரின் பெயர் காஸ்ட்ரோ என்று மாற்றப்படும் . அவர் உடல் பாடம் செய்யப்பட்டு ,' புரட்சி சதுக்கத்தில் ' கண்ணாடி சமாதியாக வைக்கப்படும்  ( மாஸ்கோவில் லெனின் உடல் இருப்பது போல ) . பாடம் செய்யப்பட லெனின் உடல்          அவர் இறக்கும் தினத்தன்று ரேடியோவிலும் , டெலிவிசனிலும் அவருடிய சொற்பொழிவுகள் நாள் பூரா ஒலிபரப்பப் படும் .பள்ளிக்கூடங்கள் ,ஆஸ்பத்திரிகள் , தொழிற்சாலைகளுக்கு அவர் பெயர் சூட்டப்படும் .நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும் .எதிரிகள் கைதாவார்கள் . ( வரலாறு மிக மு...

மாம்பழங்களை கால்சியம் கார்பைடு உபயோகித்து பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்

படம்
கால்சியம் கார்பைடு(CaC 2 ) : இது ஒரு ரசாயனப் பொருள். சுத்தமான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலையில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக்கும். இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப் பொருட்கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளியேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது உடல்நலக்கேடு: கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதன் அளவு அதிகமாகும்போது புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 33-35 சதவீத அசிட்டிலின் வாயுவை ஒருவர் சுவாசித்தால் 5-7 நிமிடங்களில் மயக்கமடையலாம். கார்பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகு...

இன்றைய நகைச்சுவை

  அவர்  :  ' என் மனைவி ஒரு தேவதை '    இவர்  :    ' ஹீம்! நீ ஒரு அதிர்ஷ்டக்காரன் , என் மனைவி உயிரோடிருக்கிறாள் .'

இன்றைய திருக்குறள் ...

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. கலைஞர் உரை: ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும். மு.வ உரை: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர். சாலமன் பாப்பையா உரை: நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர். Translation: All goodly things are duties to the men, they say Who set themselves to walk in virtue's perfect way. Explanation: It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.

வெட்டியா இருக்கிறது எம்புட்டு கஷ்டம் தெரியுமா?

படம்
காலையில் 9, 10 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும்ப வேண்டியது. கணிணியின் திரை பேஸ்புக், ருவிட்டர், ஜிமெயிலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது. இடையில் டாய்லெட்டுக்கு மட்டும் அடித்துப்புரண்டு ஓடவேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையே 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு. கூடவே  மாலையில் உறங்க 2மணிநேரம். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. கணனி பிழைத்துவிட்டால் மட்டும் ஆறாவது அறிவுக்கு வேலை. கேட்டால் வெட்டி ஒபீசர் என்று பீத்திக்கொள்வது. இப்படியெல்லாம் திட்டு வாங்கியிருக்கீங்களா? கவலை வேண்டாம். வெட்டியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? காலை 9, 10 மணிக்கு எழுந்து காபி கூட குடிக்காம கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து கலைஞர் என்ன சொன்னாரு, கமல் என்ன சொன்னாரு, உயர் திரு வினோத்  என்ன சொன்னாரு, டாட்டா ஓனர் என்ன சொன்னாரு, ஏன் பில்கேட்ஸ் என்ன சொன்னாரு வரைக்கும் அத்தனையையும் பிங்கர் டிப்ஸ்ல வச்சுக்கிட்டு, அப்பிடியே கிறிக்கட் பக்கம் போய் யாருக்காவது மொக்கை போடலாமானடனு பாத்து சூதாட்டத்தில மாட்டிக்கிட்வனை தூக்கு மாட்ட...

தனது பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

படம்
       கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் வரும் ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும் அதன் அண்மைக் காலப்பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால் அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது.  http://www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பொக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி ஆகஸ்ட் 1 முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பொக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது. இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால் கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் ...

இன்றைய நகைச்சுவை

இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் .   ஒரு கிழவர் : ' ரொம்ப பிரமாதமான காது மெசின்  வாங்கி காதில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் .ஸ்விட்சர்லாந்திலிருந்து இம்போர்ட் செய்தது . ஐம்பது வருஷம் கியாரண்டி , எக்கச்சக்கமான விலை ........'    மற்றவர்  :  ' என்ன விலை ?'  கிழவர்        :  ' மணியா ? நாலு பத்து ! '

மிளகு சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்!

படம்
'பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கல்சியம், இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.  செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு,புரதம், கனிமங்கள்உள்ளன. பிபிரைன்,பெருபிரைன்,பிபிரோனால்,கேம்ஃபினி,அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறத...

புறஊதா கதிர்கள் தொடர்ந்து படுவதால் வைரம் ஆவியாகும் தன்மை கொண்டது!

படம்
வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியின் மிக விலை உயர்ந்த கொடை வைரம். இதை விரும்பாத பெண்கள் அரிது. பாரம்பரியம், லேட்டஸ்ட் பேஷன் இரண்டுக்கும் ஈடுகொடுக்கிறது. அதனால் தான் விலை அதிகம் என்றாலும் மவுசும் குறையாமல் இருக்கிறது. வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவுஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.  அதில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு:  முத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது. வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன. அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வை...

தலைமுடிப் பராமரிப்பு குறித்து சில டிப்ஸ்கள்

படம்
பெண்களைப் பொறுத்தவரை முன்பெல்லாம் நீண்ட தலைமுடியுடன் திகழ்வதையே அதிகம் விரும்புவார்கள். காலப் போக்கில் 'பாப்' உள்ளிட்ட பல்வேறு கட்டிங்குகள் வந்து விட்டன. பெண்கள்தான் தலையலங்காரத்திலும், தலை முடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது பொதுவான கருத்து. அதில் பாதி உணமையும் கூட. அதேசமயம், தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர். அழகிய, ஸ்டைலான, சற்றே நீளமான தலைமுடியை பல்வேறு ஆண்களும் கூட விரும்புகிறார்கள். அதாவது டோணி ஸ்டைலில் முடி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது.  தலைமுடிப் பராமரிப்பு, தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்வது குறித்து சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம். 1. முதலில் நமது தலைமுடியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது முடி அலை அலையாக இருக்கிறதாஅல்லது சுருள் சுருளாக இருக்கிறதா அல்லது வளைந்து நெளிந்து இருக்கிறதாஅல்லது கோரையாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் நாம் பராமரிப்பை மேற்கொள்ள முடியும். 2. இயற்கையான எண்ணெய் வகைகள் நமது தலைமுடியை வலுப்படுத்தும்...

நாம் நினைவாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?

படம்
என்னால் படித்ததை நினைவில் வைக்க முடியவில்லை' என சில மாணவர்கள் ஆதங்கப்படுவார்கள் . அத்தனை செய்திகளையும் மூளையில் போட்டு வைத்தால் அது எப்படி தாங்கிக் கொள்ளும் என்றும் சிலர் கருத்துச் சொல்வார்கள். ஆனால் `மனித மூளைக்கு மிக அபார திறமை இருக்கிறது' என ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இவர்கள் மனித மூளையில் இரண்டு ``குயிண்டிலியன்'' (Quintillion) அளவுக்கு சின்னசின்ன செய்திகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் '' என்று ஆராய்ந்தும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது `ஒன்று' என்ற எண்ணிற்குபிறகு 18 பூஜ்யங்களை சேர்த்தால் எவ்வளவு மதிப்புவருமோ அதுதான் `குயிண்டிலியம்' என்பதன் மதிப்பாகும். அதாவது மனித மூளையின் சக்தி 40 விதமான மொழிகளை நினைவில் கொள்ளுகின்ற அளவுக்கு `அபாரசக்தி' கொண்டது.     இப்படி அதிக கொள்ளளவு கொண்ட மனித மூளையில் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி , சேமித்து பாதுகாப்பாக முறைப்படி வைக்காததுதான் இன்றைய மாணவ,மாணவிகளின் குறைபாடாகும்.   ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்க...