காப்பீடில் நடந்த காமெடி ........
வெளிநாட்டுக்கு உல்லாசப் பிரயாணம் செய்வோருக்கு ஏற்படும் விபத்துக்காக காப்பீடு செய்கிறது ' கொலம்பஸ் இன்ஸ்யுரன்ஸ் ' என்ற நிறுவனம். நஷ்ட ஈடு கேட்டு அந்த நிறுவனத்துக்கு பல வகையான மனுக்கள் .வருடா வருடம் வருகின்றன. உதரணத்துக்கு சில மனுக்கள் :
' தென் ஆப்பிரிக்காவில் ,குரங்குகள் சரணாலயத்துக்கு போயிருந்தோம் நானும் என் குடும்பத்தினரும் .காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்து சென்று குரங்குகளை பார்த்துக் கொண்டிருந்தோம் .பின்பக்கமாக சில குரங்குகள் என் காருக்குள் நுழைந்து வண்டியை ஸ்டாட் செய்து விட்டன .நாங்கள் துரத்துவதற்குள் வண்டி வெகு தூரம் ஓடி ,ஒரு மரத்தில் மோதி விட்டது .என் விலையுர்ந்த கேமரா ,பிக்னிக்கிற்காக எடுத்துச் சென்ற உணவு வகையறாக்கள் எல்லாம் பாழாகிவிட்டன .
இந்தியாவுக்கு வந்த ஒரு டூரிஸ்ட் : ' ராஜஸ்தானில் ஓர் ஒட்டக ரேஸ் நடந்து கொண்டிருந்தது .அதை வீடியோவில் படம் பிடித்த படி ஒட்டகத்தின் பக்கமாக ஓடினேன் .பட்டாணி விற்கும் ஒருவனின் வண்டியில் மோதிக் கொண்டு விழுந்து காயம் ஏற்பட்டது .மல்லாந்து விழுந்ததால் அந்த விபத்து என் வீடியோவில் பதிவாயிருக்கிறது .வேண்டுமானால் அனுப்புகிறேன் '.
லண்டனில் ஒரு பெண் ;' நடைபாதையில் போய்க் கொண்டிருந்த போது எங்கிருந்தோ ஒரு வண்டு பறந்து வந்து என்னைத் துரத்தியது .அதனிடமிருந்து தப்புவதற்காக நடைபாதை விட்டு தெருவில் இறங்கினேன் .ஒரு கார் மோதி விட்டது .
( இப்படியே போனால் மனுக்களை படிக்கும் மானேஜர் ,ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்து அதற்கு இன்ஸ்யுரன்ஸ் தொகை கேட்கக்கூடும் ) .

கருத்துகள்